நல்லாட்சியில் நாட்டை அழித்தவர்களுடன் கூட்டணி கிடையாது: சரத் பொன்சேகா!

Date:

நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நாட்டை அழித்த குழுவுடன் கூட்டு சேர்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராக இல்லை என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம்பெற்ற விசேட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பொன்சேகா, எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதில் எந்த பிரச்சினையும் இல்லை. கூட்டணியின் வெற்றி மற்றும் பயணத்தை பொதுமக்கள் தீர்மானிப்பார்கள் என தெரிவித்தார்.

எனினும் நாட்டை அழித்த நபர்களுடன் மேடை ஏறுவதற்கு வெட்கப்படுகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

யாருடன் இணைந்து அரசியல் பயணத்தை முன்னெடுக்க முடியும் மற்றும் முடியாது என்பதை அவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என பீல்ட் மார்ஷல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடும் திட்டம் உள்ளதா என ஊடகவியலாளர்கள் வினவியபோது, ​​சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் தோல்வியடைந்துள்ளதால் அவர் மீது தனக்கு நம்பிக்கை இல்லை என எம்.பி.பொன்சேகா தெரிவித்தார்.

ஊழல் விவகாரம் மட்டும் முக்கியமல்ல, திறமை, அர்ப்பணிப்பு, சொன்னதைக் கடைப்பிடிப்பது போன்றவற்றையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

முதல் முறையாக நாடொன்றின் மீது இனப்படுகொலை நடத்தியதாக தீர்ப்பு: சர்வதேச நீதிமன்றம் வழங்கியது!

மியான்மர் தனது ரோஹிங்கியா சிறுபான்மையினருக்கு எதிராக இனப்படுகொலை செய்துள்ளது என்று சர்வதேச...

நீதிமன்றில் சாட்சியமளிக்க சென்ற செயற்பாட்டாளர் மீது கொலைவெறித் தாக்குதல்: யாழில் பயங்கரம்!

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் கொலை வழக்கொன்றில் சாட்சியமளிக்க சென்ற அரசியல் செயற்பாட்டாளரும்,...

16 வயதைத் திருமணத்திற்கான விருப்பத்தெரிவாக மாற்ற வேண்டும்; இலங்கை உலமா கட்சி கோரிக்கை!

நக்கிள்ஸ் சம்பவத்துடன் தொடர்புடைய 15 வயது சிறுமியின் நலன்புரி மற்றும் தொடர்ச்சியான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்