24.2 C
Jaffna
December 17, 2024
Pagetamil
முக்கியச் செய்திகள்

கொழும்பில் கசினோ விளையாடி விட்டு சென்றவருக்கும் ஒமைக்ரோன்; பரவலை தடுக்க அரசு முயலவில்லை: தாதியர் சங்கம் குற்றச்சாட்டு!

‘ஒமைக்ரோன் வைரஸ் பிறழ்வு இலங்கையில் பரவுவதைத் தடுப்பதற்கு அரசு காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. தவறான அரசியல் தீர்மானத்தால் தான் பாரிய அச்சுறுத்தல் இதற்கு முன்னரும் ஏற்பட்டது. இனியும் அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட இடமளிக்க முடியாது.” என்று அகில இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்தனப்பிரிய தெரிவித்தார்.

நுவரெலியாவில் இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ஒமைக்ரோன் பிறழ்வே உலகுக்கு தற்போது பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இங்கிலாந்தில் நாளாந்தம் 70 பேர்வரை ஒமைக்ரோன் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். இலங்கைக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இதுவரை நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருந்து வந்த ஒருவருக்கும் ஒமைக்ரோன் உறுதியாகியுள்ளது. அவர் டிசம்பர் 9 ஆம் திகதி இலங்கை வந்துள்ளார். 11 ஆம் திகதிவரை இருந்துள்ளார். டிசம்பர் 9, 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் கொழும்பில் கசினோ விளையாடியுள்ளார்.

அந்த கசினோ நிலையத்துக்கு வந்தவர்கள் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவில்லை. இவ்வாறு செயற்பட்டால் எப்படி ஒமைக்ரோன் பிறழ்வு இலங்கையில் பரவுவதைத் தடுக்க முடியும்?

அவர் வந்த விமானத்தில் இருந்த விமான ஊழியர்கள் மற்றும் விமான நிலையத்துக்குள் தீர்வையற்றக் கடைகளில் இருந்தவர்கள் என பலரும் அவரால் அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ளனர். இவை தொடர்பில் உரிய வகையில் தேடுதல் நடத்தாவிட்டால் எப்படி நிலைமையைக் கட்டுப்படுத்துவது? இது சுகாதார அமைச்சுக்கு விளங்காதது ஏன்?

இலங்கையில் விமான நிலையம் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. நைஜிரியாவுக்கு சென்றுவந்த நிலையில் ஒமைக்ரோன் தொற்றிய தனியார் பல்கலைக்கழக பேராசிரியர் ஒரு தடுப்பூசிகூட பெறவில்லை. அவ்வாறு பெறாதவர் எப்படி வெளிநாடு சென்றிருக்க முடியும்? சுகாதார வழிகாட்டல்கள் பின்பற்றப்படுவதில்ல.

வெளிநாட்டில் இருந்துவரும் சுற்றுலாப்பயணிகள், அரசியல் பலம்மிக்க சுற்றுலா ஏஜன்களால் ,தமக்கு தேவையான ஹேட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றது. இது தொடர்பில் சுகாதார பரிசோதகர்களுக்கு அறிவிக்கப்படுவதில்லை.

எமது நாடு ஒரு தீவு. இங்கு வைரஸ் பரவுவதை தடுக்கலாம். 2ஆவது அலையைக்கூட தவறான அரசியல் தீர்மானத்தால்தான் ஏற்பட்டது. இன்று பி.சி.ஆர் பரிசோதனை உரிய வகையில் மேற்கொள்ளப்படுவதில்லை. உண்மையான தரவுகளும் வெளிப்படுத்தப்படுவதில்லை. எவ்வித திட்டமிடல்களும் இன்றி, போலியான தகவல்களை மையப்படுத்தியே தற்போத நடவடிக்கைகள் இடம்பெறுகின்றன.” என்றார்.

க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மீனவர் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வு : இந்தியா – இலங்கை கூட்டறிக்கை

Pagetamil

நரேந்திர மோடி- அனுர சந்திப்பு!

Pagetamil

இந்த நூற்றாண்டின் மோசமான சூறாவளியால் சின்னாபின்னமான பிரான்ஸ் தீவு: ஏராளமானவர்கள் பலி!

Pagetamil

இந்தியத் தலைவர்களுடன் ஜனாதிபதி அநுர தொடர் பேச்சு!

Pagetamil

மாவை கட்சியின் தலைவரா?… இல்லையா?: 5 மணித்தியாலங்கள் மல்லுக்கட்டியும் தமிழரசு மத்தியகுழுவில் முடிவில்லை!

Pagetamil

Leave a Comment