ஹுங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பொலிஸ் நிலையத்திற்குள் உயிரிழந்துள்ளளார்.
போயா தினத்தன்று மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் பிரேமதிலக்க அமரவீர (52) என்பவரே ஹுங்கம பொலிஸாரால் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர், ஹுங்கம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறிது நேரத்தில் சிறையினுள் மயக்கமடைந்து விழுந்துள்ளார்.
பின்னர் ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
சந்தேக நபரின் மரணத்தையடுத்து அவரது உறவினர்கள் உள்ளிட்ட குழுவினர் கொழும்பு – கதிர்காமம் பிரதான வீதியின் ரன்ன பகுதியில் வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1