பொது இடங்களிற்கு செல்ல ஜனவரி 1 முதல் தடுப்பூசி அட்டை அவசியம்!

Date:

ஜனவரி முதலாம் திகதி முதல் பொது இடங்களுக்குச் செல்வதற்கு தடுப்பூசி அட்டை கட்டாயமாக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கோவிட் தடுப்புக் குழுவினால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்ட கோவிட் குழு கூட்டத்தின் போது பேசிய அமைச்சர், இந்த ஒழுங்குமுறை ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்றார்.

COVID-19 க்கு எதிரான தடுப்பூசி வழங்கப்படும் போதெல்லாம் அதைப் பெறுவது குடிமக்களின் பொறுப்பு என்று அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கூறினார்.

தனிநபர் ஒருவரின் தடுப்பூசி நிலையை கண்டறிய QR குறியீடு முறையை பயன்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் ரணதுங்க தெரிவித்தார்.

கம்பஹாவில் 1,554,292 பேருக்கு COVID-19 க்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் மாவட்டத்தில் பூஸ்டர்  தடுப்பூசிகளை டிசம்பர் 31 ஆம் திகதிக்கு முன்னர் முடிக்குமாறு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இலங்கையில் 15,964,289 நபர்கள் COVID-19 க்கு எதிராக குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 13,803,820 நபர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...

வதந்திகளையும், பொய்களையும் மட்டும் பேசிய விஜய்!

“சட்டம் - ஒழுங்கு குறித்தும், குழந்தைகள் மற்றும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்