காதலிக்க மறுத்த யுவதியை அலுவலக வாசலிலேயே பெற்றோல் ஊற்றி எரித்து, தானும் தீமூட்டி தற்கொலை செய்த காதல் வெறியன்!

Date:

காதலிக்க மறுத்த பெண்ணை பொது இடத்தில் பெற்றோல் ஊற்றி எரித்து கொலை செய்து விட்டு, தனக்குத்தானே தீமூட்டி இளைஞன் தற்கொலை செய்து கொண்டுள்ளான்.

இந்த வெறிச்செயல் நேற்று (17) காலை கேரளாவின், கோழிக்கோடு, திக்கொடி பகுதியில் நடந்தது.

வெள்ளிக்கிழமை காலை திக்கோடி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு காலை 9.50 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. அந்த அலுவலகத்தில் பணியாற்றிய கிருஷ்ணப்ரியா (22) என்பவர் மீது பெட்ரோல் ஊற்றி தீவைத்துவிட்டு, நந்தகோபன் (28) என்பவர்  தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

கிருஷ்ணபிரியா, திக்கொடி ஊராட்சியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வாரமாகத்தான் அவர் பணியில் இணைந்துள்ளார்.

நந்தகோபன் 60 சதவீத தீக்காயத்துடன், கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

நந்தகோபன், நீண்ட நாட்களாக கிருஷ்ணபிரியாவை துன்புறுத்தி வந்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்: உறவினர்கள் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் தொடர்பான விசாரணை ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய...

விகாரமஹாதேவி பூங்காவிலிருந்து மூட்டை கட்டிய பிக்குகள்

ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு கோரி விகாரமஹாதேவி பூங்காவில் தேரர்களால் முன்னெடுக்கப்பட்டு...

இலங்கைக்கு அருகே கடலில் சிக்கித்தவித்த 40 ஈரான் மாலுமிகள் மீட்பு

இலங்கைக் கரையில் இருந்து சுமார் 24 கடல் மைல் தொலைவில் தவித்துக்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்