51,000 பட்டதாரி பயிலுனர்களிற்கு ஜனவரியில் நிரந்தர நியமனம்!

Date:

51,000 பட்டதாரிப் பயிலுனர்களுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 3ஆம் திகதி நிரந்தர அரச நியமனம் வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பாக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவர் கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, இந்த நியமனங்களுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி, தற்போது பயிற்சி பெற்று வரும் 51,000 வேலையற்ற பட்டதாரிகள் ஜனவரி 3ஆம் திகதி முதல் அரச அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

இவர்களில் ஒரு வருட பயிற்சி முடித்த சுமார் 42,500 பேர் அடுத்த மாதம் 3ஆம் திகதி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பயிற்சிக்கு ஆட்சேர்ப்பு செய்பவர்கள் ஒரு வருடம் முடிந்த பிறகு ஏப்ரல் 1, 2022 அன்று நிரந்தர நியமனம் செய்யப்படுவார்கள்.

இத்திட்டத்தின் கீழ் 58,116 வேலையற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமாதாரர்கள் நியமனம் பெற்றுள்ளனர்.

இருப்பினும், பயிற்சி பெறுவோர் எண்ணிக்கை 51,000 ஆக இருக்கும் என்று அரசு அறிவித்தது.

பணியமர்த்தப்பட்டவர்கள் பிரதேச செயலாளர்கள், பல்வேறு அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் மாகாண சபைகளின் கீழ் பயிற்சி பெறுவார்கள்.

ஆசிரியர் சேவையில் 22,000 நியமனங்கள் வழங்கப்படலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான கடிதம் அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் சம்பந்தப்பட்ட மாகாண சபை செயலாளர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது பயிற்சி பெற்று வரும் பட்டதாரிகளை உறுதிப்படுத்தும் நடவடிக்கை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ரஷ்யா- உக்ரைன் இடையே ஒலேஷ்கி நகரில் போர்நிறுத்தத்தை மத்தியஸதம் செய்த ட்ரம்ப் மனைவி

அமெரிக்காவின் முதற்பெண்மணி மெலானியா டிரம்ப், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் ஒலேஷ்கி...

சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை மோசமடைகிறது!

வல்வெட்டித்துறை நகரசபை தவிசாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அவர் சில நாட்களாக சுயநினைவிழந்த...

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மக்களது உரிமைகளைப் பறிக்கும் பேரபாயம்: சமத்துவக் கட்சி கடும் கண்டனம்

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் மக்களது உரிமைகளைப் பறிக்கும் பேரபாயம்: சமத்துவக் கட்சி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்