கொழும்பு பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பில் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரரிடம் பட்டம் பெறுவதற்கு மாணவர்கள் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அரசியல் நியமனத்தின் பேரில் தான் வேந்தராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அதனால் அவரிடம் பட்டம் பெற முடியாது எனவும் தெரிவித்து மாணவர்கள் கறுப்பு பட்டி அணிந்து நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நேற்று (17) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் வேந்தர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் கலந்து கொண்ட போதிலும், உபவேந்தர் சந்திரிகா விஜேரத்ன பட்டம் வழங்கினார்.
சுமார் 700 பல்கலைக்கழக மாணவர்கள் பட்டம் பெற்றுள்ளனர். கொழும்பு பல்கலைக்கழக கலைப் பீட மாணவர்களே இவ்வாறு பட்டங்களைப் பெற்றுள்ளனர்.
ஜேவிபி மாணவர் தொழிற்சங்கமே குழப்பத்தில் ஈடுபடுவதாக முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.




