கிண்ணியா படகு விபத்தில் கைதானவர்களிற்கு பிணை!

Date:

கிண்ணியா குறிஞ்சாக்கேணி மிதகு படகு கவிழ்ந்ததில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் ஐந்து இலட்சம் ரூபாய் சரீரம் பிணையில் இருவரின் கையொப்பத்துடன் பிணையில் செல்ல நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை நீதிமன்ற நீதவான் பயாஸ் ரசாக் முன்னிலையில் இன்று (16) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது இக்கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 23ஆம் திகதி கிண்ணியா குறிஞ்சாக்கேணி மிதகு படகு கவிழ்ந்ததில் ஆறு பேர் உயிரிழந்த நிலையில் குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் கிண்ணியா பொலிஸார் பாதுகாப்பு இல்லாத நிலையில் படகினை செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இதைவேளை குறித்த சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் ஜனவரி மாதம் 20ம் திகதி திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் நீதிவான் கட்டளையிட்டார்.

-அப்துல்சலாம் யாசீம்-

spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்