தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு உட்பட்ட வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 4 மேலதிக வாக்குளால் வெற்றி பெற்றுள்ளது.
வவுனியா, செட்டிகுளம் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இன்று (14) சபைத் தவிசாளர் சு.ஜெகதீஸ்வரனினால் முன்வைக்கப்பட்டது. இதனையடுத்து வரவு செலவு திட்டம் தொடர்பாக சபை உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.
இதன்போது வரவு செலவு திட்டத்தை வாக்கெடுப்புக்கு விடுமாறு உறுப்பினர்கள் கோரியதையடுத்து வாக்கெடுப்புக்கு விடப்பட்டப்பது. ஆதரவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 05, ஈபிஆர்எல்எப் 03, தமிழ் தேசிய மக்கள் முன்னனி 01, முஸ்லிம் காங்கிரஸ் 01 என 10 உறுப்பினர்கள் வாக்களித்திருந்தனர்.
எதிராக சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் (சிறிரெலோ) 4 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 2 உறுப்பினர்களும் ஆக 6 பேர் வாக்களித்தனர். இதனால் 4 மேலதிக வாக்குகளால் சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் வெற்றிபெற்றது. பொதுஜன பெரமுனவின் ஒரு உறுப்பினர் வாக்கெடுப்பின் போது நடுநிலைமை வகித்திருந்தார்.
இதேவேளை, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆளுகைக்குள் இருந்த செட்டிகுளம் பிரதேச சபையின் வரவு செலவு திட்டம் கடந்த வருடம் தோற்கடிக்கப்பட்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆட்சியைக் கைப்பற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.