யுகதனவி ஒப்பந்தம் நாட்டைக் காட்டிக் கொடுக்கும் துரோகம்: பெரமுன எம்.பி போர்க்கொடி!

Date:

கெரவலப்பிட்டிய,, யுகதனவி எல்என்ஜி மின் உற்பத்தி நிலையத்தின் 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் ஒப்பந்தம் தேசத்தை காட்டிக் கொடுக்கும் ஒப்பந்தம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குற்றம்சுமத்தியுள்ளார்.

உடன்படிக்கையை கைச்சாத்திட அனுமதித்த அனைத்து அமைச்சரவை அமைச்சர்களும் இலங்கையின் எதிர்காலத்திற்கு துரோகம் இழைத்த குற்றவாளிகள் என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

இந்த உடன்படிக்கை இரகசியமாக கைச்சாத்திடப்பட்டமைக்கு தெளிவான ஆதாரம் கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் வீரக்கொடி இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் இன்னும் செல்லுபடியாகும் என்பதால், சட்டமா அதிபரிடம் இருந்து மறைத்து கையெழுத்திட்ட ஒப்பந்தம் அரசியல் சாசனத்தை மீறுவதாக உள்ளது என அவர் வலியுறுத்தினார்.

நாட்டுக்கு துரோகம் இழைத்தவர்கள் ஜனாதிபதியினால் வெளிக்கொணரப்பட வேண்டும், பதவியில் இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பண்டிகைக்காலத்தில் கோழி இறைச்சி விலை அதிகரிக்காது!

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் கோழி இறைச்சி விலை பாரியளவில் அதிகரிக்காது என...

மீண்டும் பொருளாதார நெருக்கடியா? திட்டமிட்ட சதி குறித்து ஜனாதிபதி எச்சரிக்கை!

2028ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் அரச துறை ஊழியர்களின்...

இரத்தினபுரி – ஹிதெல்லன பகுதியில் தனியார் பேருந்தும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 11 பேர் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் ஐவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்