முதியோர் இல்லத்தில் 62 வயது பெண்ணும், 79 வயது ஆணும் திருமணம்!

Date:

முதியோர் இல்லத்தில் வசித்து வந்த இருவர் அண்மையில் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

நாரம்மல சடலங்காவில் உள்ள வெல்கம் வில்லேஜ் என்ற இ்லத்தில் வசித்து வந்த  லியோனி பெர்னாண்டோ (62) மற்றும் சிறில் குணவர்தன (79) ஆகியோர், டிசம்பர் 8 ஆம் திகதிதிருமணம் செய்து கொண்டனர்.

சிறில் குணவர்தன இலங்கை போக்குவரத்து சபையின் முன்னாள் ஊழியர் ஆவார்.

லியோனி 9 மாத குழந்தையாக இருந்த போது பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டார்.  அவர் கைவினைப்பொருள்கள் தயாரிப்பதில் சிறந்து விளங்கினார் மற்றும் திறமையான பாடகியாக இருந்தார். தென் கொரியாவில் நடந்த பாடல் போட்டியிலும் கலந்து கொண்டார்.

சிரில் பல வருடங்களாக முதியோர் இல்லத்தில் லியோனியை கவனித்து வருகிறார். இதன்போது இருவருக்கும் காதல் பிறந்து திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

சிரிலுக்கு நெருங்கிய குடும்பம் இல்லை. வத்தளையிலுள்ள லியோனியின் உறவினர் வீட்டில் திருமணம் நடைபெற்றது. இதில் லியோனியின் மருமகன்கள் மற்றும் பிற உறவுகள் கலந்து கொண்டனர்.

இந்த தம்பதியினர் வெல்கம் வில்லேஜ் என்ற முதியோர் இல்லத்திலேயே தொடர்ந்து வசிப்பார்கள்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்