திருமணமான 1 மாதத்திலேயே கணவரை கொலை செய்ய முயன்றது வெளியே தெரிந்ததால் மனைவி தற்கொலை: கூலிப்படையை சேர்ந்த 5 பேர் கைது!

Date:

கணவரை கொலை செய்ய ஏற்பாடு செய்த விஷயம் வெளியே தெரிந்ததால் புதுப்பெண் தற் கொலை செய்து கொண்டார். கூலிப்படையைச் சேர்ந்த 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் உலகத் தேவர் தெருவைச் சேர்ந்தவர் கவுதமன் (24), இவருக்கும், இதே ஊரைச் சேர்ந்த புவனேஸ்வரிக்கும் (21) நவம்பர்10ஆம் தேதி திருமணம் நடந்தது.

இந்நிலையில் டிசம்பர் 8ஆம் தேதி புவனேஸ்வரி வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கம்பம் போலீஸார் விசாரணை செய்தனர்.

இது குறித்து போலீஸார் கூறியதாவது:

கட்டாயத் திருமணம் செய்ததால் கவுதமனுடன் வாழ விருப்பம் இல்லாமல் புவனேஸ்வரி இருந்துள்ளார். இதைத் தொடர்ந்து கூலிப்படை மூலம் கவுதமனை கொலை செய்ய ஏற்பாடு செய்தார்.

அவர்கள் கூடலூர் தொட்டிப்பாலம் அருகே காரை மோதி கவுதமனை கொலை செய்ய முயன்றனர். ஆனால் அவர் தப்பிவிட்டார்.

விஷயம் வெளியே தெரிந்து விட்டதால் புவனேஸ்வரி தற்கொலை செய்து கொண்டார் என்றனர்.

கவுதமனை கொலை செய்ய முயன்ற நிரஞ்சன்ராஜா (36) பிரதீப் (35), மனோஜ்குமார் (20), ஆல்பர்ட் (34), ஜெயசத்யா (18) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். ஜெட்லி என்பவரை தேடி வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலையில் 2 தமிழ் பெண்கள் கடத்தல் விவகாரம்: கடற்படையின் 2 பெண் உத்தியோகத்தர்கள் கைது!

திருகோணமலையில் 2008-ஆம் ஆண்டு சசிகுமார் தென்மொழி மற்றும் மேரி டெல்ஷியா ஆகிய...

மன்னிப்பு வழங்குமாறு அநுரவிடம் கெஞ்சும் ஞானசாரர்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் 2019 இல் தனக்கு வழங்கப்பட்ட ஜனாதிபதி...

னோஜனின் குடும்பத்திற்கு ரிஷாட் பதியுதீன் நேரில் ஆறுதல்: விடுதலைக்காகத் தீவிர முயற்சி

சவூதி அரேபியாவில் தண்டனை விதிக்கப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கல்முனை, நற்பிட்டிமுனையைச்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்