கண்டி அணியை தோற்கடித்து புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது யாழ்ப்பாணம்!

Date:

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் இன்று (12) ஆர்.பிரேமதாசா அரங்கில் இடம்பெற்ற 12 வது போட்டியில் ஜப்னா கிங்ஸ் அணி டக்வேர்த் லூயிஸ் முறையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் கண்டி வொரியர்ஸ் அணியை தோற்கடித்தது.

மழையால் பாதித்த ஆட்டத்தில் 10 ஓவர்களில் 95 ரன்களை சேஸ் செய்த யப்னா கிங்ஸ் அணி 8.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

முன்னதாக, கண்டி வொரியர்ஸ் ஆடிக் கொண்டிருந்த போது மழை குறுக்கிட்டது. அப்போது, 12.2 ஓவர்களில் 94/2 என்ற நிலைமையில் இருந்தது.

சரித் அசலங்கா 34 பந்துகளில் 44 ரன்களும், அஹமட் ஷெசாத் மற்றும் மினோத் பானுகா 20 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

நீண்டநேரம் மழை பெய்த காரணத்தினால், டக்வேர்த் லூயிஸ் விதிப்படி ஜப்னா கிங்ஸ் அணியின் வெற்றி இலக்காக 10 ஓவர்களில் 95 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெப்னா கிங்ஸ் அணி 8 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக அணித்தலைவர் திசர பெரேரா 13 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 29 ஓட்டங்களையும், அவிஷ்க பெர்னாண்டோ 12 பந்துகளில் 23 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்த வெற்றியின் மூலம் யப்னா கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பெற்றது.

spot_imgspot_img

More like this
Related

வித்தியா கொலை: சுவிஸ் குமார், கூட்டாளிகளின் மேன்முறையீட்டு மனு விசாரணை நிறைவு!

2015ஆம் ஆண்டு பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாணப் பாடசாலை மாணவி சிவலோகநாதன்...

போதைப்பொருளுடன் சிக்கிய அதிபரின் மனைவியின் பின்னணி

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரின் மனைவி, தேசிய...

நியூயோர்க் விரைவில் கம்யூனிசமாக மாறும்: ட்ரம்ப்

நியூயார்க் மக்கள் இடதுசாரி ஜோஹ்ரான் மம்தானியை அடுத்த மேயராகத் தேர்ந்தெடுத்த பிறகு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்