குருவிட்ட, வலந்துர கார்டியல்ல பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது காணாமல் போன இராணுவ கப்டன் சுரன் ரணசிங்கவின் சடலம் நேற்று குருகங்கையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக குருவிட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
கப்டன் சூரன் ரணசிங்க குருவிட்ட கெமுனு வோச் படையணியில் கடமையாற்றும் இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் மில்லவிட்டிய பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 5ஆம் திகதி மாலை கரடியல்ல பகுதியில் உள்ள நீர்நிலையொன்றில் நான்கு நண்பர்களுடன் நீராடச் சென்றுள்ளார்.
இருவர் திடீரென ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும், ஒருவர் மரக்கிளையை பிடித்து தப்பித்துக் கொண்டதாகவும், இராணுவ கப்டன் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதாகவும், நேற்று மாலை வரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லையென்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
குருவிட்ட பொலிஸார், குருவிட்ட இராணுவ முகாம், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து காணாமல் போன கப்டனின் சடலத்தை கண்டெடுத்துள்ளனர்.