24.1 C
Jaffna
January 6, 2025
Pagetamil
விளையாட்டு

LPL 2021: காலியை வீழ்த்தியது கொழும்பு!

லங்கா பிரிமியர் லீக் தொடரில் நேற்று இடம்பெற்ற போட்டியில் 4 விக்கெட்டுக்களால் காலி கிளாடியேட்டர்ஸ் அணியை வீழ்த்தி கொழும்பு ஸ்டார்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற காலி கிளாடியேட்டர்ஸ் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 116 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் பென் டங்க் அதிகபட்சமாக 38 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

இலக்கை விரட்டிய கொழும்பு ஸ்டார்ஸ் அணி 17.3 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இழக்கை அடைந்தது.

இரண்டு விக்கெட்டுக்களையும் துடுப்பாட்டத்தில் 24 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்ட தனஞ்சய டி சில்வா ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தீர்ந்தது 10 ஆண்டு தாகம்: அவுஸ்திரேலியா வசமானது போர்டர் – கவாஸ்கர் டிராபி!

Pagetamil

சாம் கான்ஸ்டாஸ் உடன் மோதிய விராட் கோலி: ஐசிசி விதிகள் சொல்வது என்ன?

Pagetamil

நியூசிலாந்து தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

Pagetamil

21ஆம் நூற்றாண்டின் அரிய கிரிக்கெட் சாதனை: பாகிஸ்தான் அணி அசத்தல்!

Pagetamil

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெற்றார் இந்திய வீரர் அஸ்வின்!

Pagetamil

Leave a Comment