மருத்துவர் ஆலோசனைப்படியே படப்பிடிப்புக்கு சென்றார் கமல்: சுகாதாரத் துறை செயலர் விளக்கம்

Date:

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் 14 நாட்கள் தனிமைக்கு பிறகு, மருத்துவரின் ஆலோசனைப்படியே படப்பிடிப்புக்கு சென்றதாக சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

கமல்ஹாசன் சமீபத்தில் அமெரிக்கா சென்றிருந்தார். அங்கிருந்து சென்னை திரும்பிய அவருக்கு கடந்த மாதம் 22ஆம் திகதி கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து, போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பிறகு, அவர் கடந்த 4ஆம் திகதி வீடு திரும்பினார். வீடு திரும்பிய உடனே, தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் படப்பிடிப்பில் கமல்ஹாசன் கலந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது சுகாதாரத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணனிடம் இதுபற்றி கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்கு பதில் அளித்த அவர், கமல்ஹாசனிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்படும் என்று கூறியதாக செய்தி வெளியானது.

ஆனால், இதை ஜெ.ராதாகிருஷ்ணன் மறுத்துள்ளார். அவர் கூறியதாவது:

இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு செய்திகள் வெளியாகியுள்ளன. கமல்ஹாசன் 2 தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டதால், அவருக்கு கொரோனா தொற்றின் தாக்கம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்தது. அவர் 14 நாட்கள் தனிமைக்கு பிறகு, மருத்துவரின் ஆலோசனைப்படியே படப்பிடிப்புக்கு சென்றுள்ளார். அதனால், அதுதொடர்பாக அவரிடம் எந்த விளக்கமும் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

சீனா மனித உருவ ரோபோ விளையாட்டில் உசைன் போல்ட்டின் 100 மீற்றர் ஓட்ட சாதனையை முறியடித்த ரோபோ!

சனிக்கிழமையன்று பெய்ஜிங்கில் நடைபெற்ற உலக ஹியூமனாய்ட் ரோபோ விளையாட்டுப் போட்டிகளின் தகுதிச்...

யாழில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 27 வயது இளைஞன் கைது!

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச்...

மிட்செல் ஸ்டார்க்கின் வேகத்தில் 64 ரன்களுக்கு சுருண்டது பங்களாதேஷ் அணி

அவுஸ்​திரேலியா - பங்களாதேஷ் அணி​கள் இடையி​லான கடைசி மற்​றும் 2வது டெஸ்ட்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்