இலங்கை இராணுவத்திற்கு புதிய தலைமை அதிகாரி!

Date:

இராணுவத்தின் 59வது தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே இன்று (7) நியமிக்கப்பட்டுள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் தளபதியும் பாதுகாப்புப் படைகளின் பிரதானியுமான இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் பரிந்துரையின் பேரில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இராணுவத்தின் 58வது தலைமை அதிகாரியாக கடமையாற்றிய மேஜர் ஜெனரல் பிரியந்த பெரேரா ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு மேஜர் ஜெனரல் லியனகே நியமிக்கப்பட்டுள்ளார்.

மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே கஜபா படைப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரியாவார். அவர் புதிய நியமனத்திற்கு முன்னர் தொண்டர் படையின் தளபதியாக கடமையாற்றினார்.

spot_imgspot_img

More like this
Related

உக்ரைன் ஆயுதங்களின் வேகத்தைக் கட்டுப்படுத்திய Starlink? அமெரிக்கா மீது சந்தேகம்!

உக்ரைனின் இராணுவ நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படும் Starlink இணையச் சேவையில் விதிக்கப்பட்ட வேகக்...

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்து – குழந்தை உட்பட 6 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவின் விஸ்கான்சின் மாநிலத்தில் இடம்பெற்ற சிறிய விமான விபத்தில் குழந்தை உட்பட...

இலங்கையில் இன்னும் அறிமுகமாகாத டெங்கு தடுப்பூசி! அனுமதி வழங்குவதில் தாமதம் ஏன்?

இலங்கையில் டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவதாக சுகாதார அமைச்சு அறிவித்திருந்த போதிலும், இதுவரை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்