கொரோனா தொற்று இல்லாத இடமாகத் திகழ்ந்த குக் தீவுகளில் முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சுமார் இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸை நாட்டிற்குள் வரவிடாமல் தடுத்த குக் தீவுகளில் நேற்று முன்தினம் முதலாவது தொற்றாளர் அடையாளம் காணப்பட்டார்.
தென் பசிபிக் நாடான குக் தீவுகள் வெளிநாட்டுப் பயணிகளுக்கு எல்லைகளைத் திறந்துவிடவிருந்த நேரத்தில் அங்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
சுமார் 17,000 பேர் வாழும் குக் தீவுகளில் 96 வீதமானவர்கள் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள்.
10 வயதுச் சிறுவனுக்கு தொற்று ஏற்பட்டதாகவும் சிறுவன் நியூஸிலந்திலிருந்து குடும்பத்துடன் நாடு திரும்பியவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோதுதான் சிறுவனுக்கு தொற்று அடையாளம் காணப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.



