30.8 C
Jaffna
March 19, 2024
கிழக்கு

கப்பம் கோரிய போலி சிஐடி கைது!

மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லடி உப்போடை புறநகர் பகுதி ஒன்றில் அண்மையில் நகை திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது.

திருட்டு சந்தேக நபராக ஒருவரை அடையாளம் காணப்பட்ட ஒருவரின் வீட்டிற்கு விசாரணைக்கென காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் சென்றுள்ளனர்.

சந்தேக நபர் வீட்டில் இல்லாமையினால் மீண்டும் வருவதாக கூறி அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளனர்.

பொலிசார் சென்ற சில நிமிடத்திற்கு மற்றுமொரு போலி சி.ஐ.டி என கூறப்படும் நபர் ஒருவர் அந்த வீட்டிற்கு சென்று, ரூ.10 ஆயிரம் கப்பமாக தந்தால் குறித்த பிரச்சினையை தீர்த்து தருவதாக சந்தேக நபரின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளார்.

கப்பம் கோரிய போலி சி.ஐ.டி தொடர்பாக தொடர்பில் விசேட புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய ஞாயிற்றுக்கிழமை(06) இரவு காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் சென்ற பொலிஸார் குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் வைத்திருந்த அடையாள அட்டையில் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளதுடன் கல்விப்பணிப்பாளர் என பதவி குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்..

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

20 பவுண் நகை திருடியவர்கள் சிக்கினர்

Pagetamil

காட்டு யானை தாக்கி வெளிநாட்டு பிரஜை பலி

Pagetamil

7 வயது சிறுமியை துஸ்பிரயோகம் செய்த 4 சிறுவர்களுக்கு பிணை

Pagetamil

இரட்டைக் கொலை நடந்தது என்ன?

Pagetamil

மனநலம் பாதிக்கப்பட்ட 2 பிள்ளைகளையும் கழுத்தறுத்து கொன்றுவிட்டு தந்தை தற்கொலை முயற்சி

Pagetamil

Leave a Comment