Pagetamil
இலங்கை

‘தங்கம் தேடிச் செல்லவில்லை; வாழ்த்தவே சென்றோம்’: அமைச்சர் தேவானந்தாவின் செயலாளர் விளக்கம்!

2021.12.01 ஆம் திகதி மற்றும் 2021.12.02 ஆம் திகதிகளில் இணைய தளமொன்றில் வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் பத்திரிகையிலும் பல பிரதான இலத்திரனியல் ஊடகங்களிலும், பல சமூக ஊடகங்களிலும் எனக்கும், எனது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கும், மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரால் சரத் வீரசேக்கர அவர்களுக்கும் எதிராக வடக்கில் அரசாங்கத்திற்கு அறிவிக்காமல் தங்கம் அகழ்வு செய்யப்போனதாக அபாண்டமாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானதும் போலியானதும் சதித்திட்டமானதுமாகும்.

இது நான் ஒரு ஊடாவியலாளர் என்ற வகையில் நான்கு தசாப்த காலத்திற்கும் மேலான எனது நற்பெயரை அழிக்கவும் எனது அமைச்சர் உட்பட ஏனையோர்களின் நற்பெயர்களுக்கு பங்கம் விளைவிக்கவும் அதேபோல் அரசாங்கத்தை சங்கடப்படுத்தும் அரசியல் சதி என்பதை முதலில் கூற விரும்புகிறேன்.

எனது அமைச்சரின் ஊடகச் செயலாளராக நான் 35 வருடங்களுக்கு மேலாக பணி புரிந்து வருகின்றேன். நான் கடற்றொழில் அமைச்சுடன் தொடர்புடைய தேசிய கடற்றொழில் மஹா கங்கத்தில் பொதுச் செயலாளராகவும் உள்ளேன். நான் எனது உத்தியோகபூர்வ கடமைகளுக்காக வடக்கு கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் பயணிக்கும் நபராவேன். நான் செய்யும் அனைத்து கடமைகளும் எனது அமைச்சர் அவர்களால் பணிப்புரை வழங்கும் கடமைகளாவதுடன் இந்த நடவடிக்கைகள் தொடர்பில் நான் அடிக்கடி அமைச்சருடன் தொடர்பில் இருப்பேன்.

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் விவசாய நிலங்களையும் கால்நடை வளர்ப்புக்காக பயன்படுத்தப்படும் மேச்சல் தரைகளையும் மக்கள் வசிக்கும் காணிகள் உட்பட சுமார் நூற்றுக் கணக்கான ஏக்கர் நிலங்களையும் வன பாதுகாப்பு மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் புதிய எல்லைக் கற்களுடன் கையகப்பட்டுள்ளதனால் அந்தக் காணிகளை மீண்டும் மக்கள் பயன்படுத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்காக எனது அமைச்சர் வன வள அமைச்சுடன் இணைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு என்னிடம் ஒப்படைத்துள்ளார். இது தொடர்பில் ஆராய்வதற்காக நான் கடந்த 23ஆம் திகதி கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்குச் சென்றிருந்தேன்.

இதேவேளை, கடந்த 19ஆம் திகதி புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியாக கடமைகளை பொறுப்பேற்ற திரு ஹேரத் என்பவர் எனது உறவினராவார். அவர் முதல் தடவையாக பொலிஸ் பொறுப்பதிகாரியாக கடமையை பொறுப்பேற்ற நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த போதிலும் அன்று என்னால் கலந்து கொள்ள முடியாத காரணத்தினால் கடந்த 23ஆம் திகதி மாலை நேரத்தில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்குச் சென்று வாழ்த்து தெரிவித்துவிட்டு இரவு திரும்பினேன்.

அன்றைய தினம் அமைச்சர்களின் செயலாளர்கள் என்றவகையில் எனது உறவினரான குறித்த பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு  அமைச்சர் சரத் வீரசேகர அவர்களின் இணைப்புச் செயலாளர் சுதத் ஜெயசிங்க அவர்களும் என்னுடன் அங்கு வருகை தந்து தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகின்றேன்.

அன்று நடந்த இச்சம்பவம் தொடர்பில் பிரதான பத்திரிகைகளிலும் இலத்தரனியல் ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களிலும் எம்மீது அபாண்டமான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்ததுடன் அது தொடர்பில் எனது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை நாடாளுமன்றத்தில் சந்தித்த அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கு அமைய மேற்படி சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுத் தொடர்பில் நடந்த விடயங்கள் குறித்த தெளிவுபடுத்தலை ஊடகங்களுக்கு வெளிப்படுத்துமாறு எனது அமைச்சர் என்னிடம் கேட்டுக்கொண்டதற்கு அமைவாக இந்தச் செய்தியை ஊடகங்களுக்கு அனுப்பிவைக்கின்றேன்.

இலத்திரனியல் உட்பட பத்திரிகைகள் மற்றும் வெகுஜன ஊடகங்களிடம் நான் கேட்டுக் கொள்வது நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக எனது கறைபடியாத ஊடக வாழ்க்கையை அழிக்க வேண்டாம் என்றும், 13 தடவைகளுக்கும் மேலாக புலிகளின் கொடூர தாக்குதல்கள் மற்றும் கொலை மிரட்டல்களில் இருந்து தப்பித்து இந்த நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்காக போராடிய எனது அமைச்சர் தேவானந்தாவின் அரசியல் வாழ்க்கைக்கும், புலிகளுக்கு எதிராக கடுமையாக போராடி, பின்னர் ஓய்வு பெற்ற சிவில் பாதுகாப்புத் திணைக்கள தலைவராக செயற்பட்டு இந்நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக செயற்பட்டு இன்று மக்கள் பாதுகாப்பு அமைச்சராகவுள்ள அமைச்சர் ரியர் அட்மிரால் சரத் வீரசேகர அவர்களின் நற்பெயரை அழிப்பதற்கு சதி செய்யும் அரசியல் சதிகளுக்கு ஊடகவியலாளர்களும் மக்களும் ஏமாந்து விடக்கூடாது என்பதாகும்.

மேலும் ஊடக தர்மத்தின் பிரகாரம் இவ்வாறான செய்திகள் கிடைத்தவுடன் சம்பந்தப்பட்ட தரப்பினரிடம் வினவுவது ஊடக நிறுவனங்களின் பொறுப்பும் நெறிமுறையும் என்பதை அனைத்து ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கும் தெரிந்த விடயமாகும்.

எவ்வாறாயினும் எம்மிடம் கலந்தாலோசிக்காமல் எமது பண்புக்கும் நற்பெயருக்கும் கலங்கம் ஏற்படும் வகையில் இச்செய்தியை வெளியிட்டமை தொடர்பில் வருத்தம் தெரிவிப்பதுவதுடன், கடந்த 23ஆம் திகதி இடம்பெற்றதாக நீங்கள் வெளியிடப்படட் செய்திக்கு இணையான முக்கியத்துவத்தினை இந்த அறிவிப்புக்கும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

நெல்சன் எதிரிசிங்க
அமைச்சரின் ஊடகச் செயலாளர்

(மேலே உள்ள படம்- முல்லைத்தீவு, சுதந்திரபுரத்தில் உள்ள மேற்படி சர்ச்சைக்குரிய பகுதியில் நீதிமன்ற உத்தரவிற்கமைய தங்கத்தை தேடி நடந்த அகழ்வு பணி)

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

புலிகளால் மகிந்த ராஜபக்சவுக்கு ஆபத்து இல்லை – சரத் பொன்சேகா

east tamil

இன்றைய வானிலை

Pagetamil

கைதியை சந்திக்க வந்த நண்பர்கள் கைது

east tamil

மண்ணெண்ணெய் புதிய விலை அறிவிப்பு

east tamil

முல்லைத்தீவு மாவட்டத்தில் உலக மண் தினம்: விவசாயிகளின் எதிர்காலம் குறித்து ஆளுநரின் பேச்சு

east tamil

Leave a Comment