கொடிகாமம் பொலிஸ் பிரிவில், பட்டா ரக வாகனத்தை புகையிரதம் மோதித் தள்ளியதில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்று (3) மாலை இந்த சம்பவம் நடந்தது.
மிருசுவில் வைத்தியசாலைக்கு அண்மையாக, புகையிரத கடவையை பட்டா ரக வாகனம் கடந்த போது, புகையிரதம் மோதித்தள்ளியது.
வாகனத்தை செலுத்திச் சென்ற, கொடிகாமம், தவசிக்குளத்தை சேர்ந்த 3 பிள்ளைகளின் தந்தையான சூசைநாதன் பிரதீபன் (32) என்பவரே உயிரிழந்தார்.
அவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதும், உயிரிழந்தார்.
What’s your Reaction?
+1
+1
+1
1
+1
+1
+1
+1