40 ஆண்டுகளில் ஆர்க்டிக் வட்டாரம் மழை பொழியும் இடமாக மாறிவிடும்!

Date:

ஆர்க்டிக் வட்டாரம் 2060ஆம் ஆண்டுக்குள் பனிபடர்ந்த இடம் என்ற நிலையிலிருந்து மழைபொழியும் இடமாக மாறிவிடும் என்று புதிய தகவல் ஒன்று கூறுகிறது.

அது குறித்த விவரங்கள் Nature Communications ஆய்விதழில் இடம்பெற்றுள்ளன.

கடலில் உள்ள பனிப்பாறைகள் உருகி மழைப்பொழிவு அதிகரிக்கும் என்றும் அது 2090இலிருந்து 2100ஆம் ஆண்டுக்குள் நிகழலாம் என்றும் முன்னர் கூறப்பட்டிருந்தது.

ஆனால் தற்போது உலகம் வெப்பமடையும் வேகத்தைப் பார்க்கும்போது அது இந்த நூற்றாண்டின் இறுதிக்கு முன்னதாகவே இடம்பெறக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

ஆர்க்டிக் வட்டாரத்தில் மழைப்பொழிவு அதிகரித்தால் அது ஆர்க்டிக் வட்டாரத்துக்கும் அட்லாண்டிக் பெருங்கடலுக்கும் இடையில் இருக்கும் கிரீன்லாந்து வட்டாரத்தில் உள்ள பனித்தகடுகளின் அடர்த்தியைப் பாதிக்கும்.

அதனால் உலக அளவில் கடல் நீர்மட்டம் அதிகரிக்கும்.

இதன் விளைவாக அவுஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள உயிரினங்கள் சில, முற்றிலும் அழிந்துபோகும் ஆபத்து உள்ளது.

ஏற்கனவே இந்த ஆண்டு அவுஸ்திரேலியாவின் சில பகுதிகளில் அனல்காற்று வீசியது. இந்த வாரம் சில வட்டாரங்களில் வெப்பநிலை 45 டிகிரி செல்சியஸைத் தாண்டக்கூடும் என்று முன்னறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இத்தகைய வறண்ட, வெப்பமான சூழல் காட்டுத்தீயை ஏற்படுத்தக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.

 

spot_imgspot_img

More like this
Related

வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97...

இலங்கை தமிழ் அரசு கட்சி வரவு செலவு திட்டத்தை எதிர்க்கும்!

இலங்கைத் தமிழ் அரசு கட்சி, 2027-ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக...

மட்டக்களப்பில் விபத்துக்குள்ளான வான் ஒன்றை தீ வைத்து எரித்த 4 பேருக்கு 3 வருட கடூழிய சிறைத்தண்டனை மேல் நீதிமன்றம் தீர்ப்பு

ஏறாவூர் பொலிஸ் பிரிலுள்ள வந்தாறுமூலை மாவடிவேம்பு பகுதியில் 2015 ஆண்டு இடம்பெற்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்