ஒமைக்ரோன் தென்னாபிரிக்காவில் கண்டறியப்படுவதற்கு முன்னரே ஐரோப்பாவில் இருந்தது!

Date:

தென்னாபிரிக்காவில் ஒமைக்ரோன் வகை பிறழ்வு கண்டறியப்படுவதற்கு முன்பே அது ஐரோப்பாவில் இருந்ததாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒமைக்ரோன் பிறழ்வை பற்றித் தென்னாபிரிக்கா அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்னரே, நெதர்லந்தில் அது இருவரிடம் அடையாளம் காணப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் ஒருவர் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளாதவர்.

அதனால், ஆபிரிக்காவின் தெற்குப்பகுதியில் உள்ள நாடுகள் மீது பயணக் கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு எதிராக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

அத்தகைய பயணக் கட்டுப்பாடுகளில் நன்மையைவிட தீமையே அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுவரை அவுஸ்திரேலியா, பிரிட்டன், ஹொங்கொங், இஸ்ரேல் உள்ளிட்ட பல நாடுகளில் ஒமைக்ரோன் பிறழ்வு கண்டறியப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

யாழ். விமான நிலைய ஓடுபாதையில் மின்விளக்குகள் கூட இல்லாதது அதிர்ச்சியளிக்கிறது

காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கு இந்திய...

6 பிரதிப்பொலிஸ்மா அதிபர்களுக்கு இடமாற்றம்

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அங்கீகாரத்திற்கு உட்பட்டு, ஆறு பிரதி பொலிஸ் மா...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்