அண்மையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வீடுகள், கடைகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் ஏற்பட்ட எரிவாயு சிலிண்டர் தீ மற்றும் வெடிப்புகள் குறித்து ஆராய்ந்து அதற்கான காரணத்தை கண்டறிந்து சாத்தியமான தீர்வுகளை பரிந்துரைப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எட்டு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார்.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சாந்த வல்பொல தலைமையில் இந்தக் குழு அமைக்கப்படவுள்ளது.
இந்தக் குழுவில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜித் டி சில்வா, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டபிள்யூ. டி.டபிள்யூ. ஜயதிலக, பேராசிரியர் பிரதீப் ஜயவீர, இலங்கை கண்டுபிடிப்பாளர்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர். நாராயண சிறிமுத்து, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவனத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுதர்ஷன சோமசிறி மற்றும் இலங்கை தரநிலை நிறுவகத்தின் சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் (தொழில்நுட்பம்) சுஜீவ மஹகம. ஆகியோர் அங்கம் வகிக்கிறார்கள்.
அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும், தற்போதுள்ள ஆய்வுகளையும் ஆராய்ந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி குழுவிற்கு பணிப்புரை விடுத்தார்.