25 C
Jaffna
January 12, 2025
Pagetamil
இலங்கை

யுகதனவி: நீதிமன்றத்தின் உத்தரவு!

கெரவலப்பிட்டி யுகடனவி அனல் மின் நிலையத்தின் 40% அரசுக்கு சொந்தமான பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு மாற்றும் அமைச்சரவை தீர்மானத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான ஆட்சேபனைகளை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது

அத்துடன், அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் 16 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு உயர் நீதிமன்றம் இன்று (29) உத்தரவிட்டுள்ளது.

பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித், எல்லே குணவன்ச தேரர், ஐக்கிய மக்கள் சக்தி மற்று , தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட தரப்பினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவே இன்று (29) விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, புவனேக அலுவிஹாரே, பிரியந்த ஜயவர்தன, விஜித் மலல்கொட மற்றும் எல்.ரீ.பி தெஹிதெனிய ஆகிய ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

இதன்போது குறித்த மனுக்களை எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

ஆட்சேபனைகள் இருப்பின் அடுத்த மாதம் 6ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு சட்டமா அதிபருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பருத்தித்துறை மரக்கறி சந்தை வியாபாரிகளின் அதிருப்தி

east tamil

போதையில் வண்டியை செலுத்தியமைக்கு தண்டம் 25000/

east tamil

கிளிநொச்சி வைத்தியசாலை நோயாளர் நலன்புரிச் சங்கத்தால் 100 பொங்கல் பானைகள் வழங்கி வைப்பு

Pagetamil

கனகபுரம் துயிலுமில்லத்தை கைப்பற்றும் முயற்சி தோல்வி

east tamil

சீதுவவில் இந்திய பிரஜை தூக்கில் மரணம்

east tamil

Leave a Comment