திருகோணமலை கிண்ணியா வில்வெளி பிரதேசத்தில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று (27) இரவு இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.
விபத்து தொடர்பில் தெரியவருவதாவது-
கிண்ணியாவில் இருந்து சுரங்கல் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி நாய் ஒன்றுடன் மோதியதில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி எதிர்திசையில் வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நபரே பலத்த காயங்களுடன் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு விபத்துக்கான நபர் கிண்ணியா இடிமண் பிரதேசத்தைச்சேந்த ஏ.எப்.பாரூக் (53) எனவும் விபத்துக்குள்ளான நபரின் கால் ஒன்று முறிந்த நிலையில் திருகோணமலை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை பேச்சளார் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் விபத்து தொடர்பில் முச்சக்கர வண்டி சாரதி கைது செய்து செய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிசார் மேற்றுகொண்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
–திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்-