28.2 C
Jaffna
February 24, 2025
Pagetamil
இலங்கை

19 வயது காதலி… 44 வயது காதலன்; யாழில் நடந்த பேஸ்புக் காதல் திருமணம்!

யாழ்ப்பாணத்தில் 19 வயதான யுவதியும், 44 வயதான பேஸ்புக் வெளிநாட்டு காதலனும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

கோப்பாய் பகுதியில் கடந்த வாரம் இந்த திருமணம், பெரும் களேபரங்களிற்கிடையில் நடந்து முடிந்தது.

19 வயதான யுவதி உயர்தரம் கற்றுக்கொண்டிருந்த போதே, கடந்த சில மாதங்களாக பேஸ்புக் காதலில் வீழ்ந்ததாக தெரிய வருகிறது. கனடாவில் வதியும்  சாவகச்சேரி பகுதியை சேர்ந்த ஒருவரை உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளார்.

அது தெய்வீக காதலென இருவரும் நம்பியதால், தமக்கிடையிலிருந்து வயது வித்தியாசததை அவர்கள் கணக்கில் கொள்ளவில்லை. காதலனிற்கு 44 வயது.

சில வாரங்களிற்கு முன்னர் காதலன் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

யுவதி தனது வீட்டில் காதல் விவகாரத்தை கூறினார். வீட்டில் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த போது, கடந்த வாரம் வீட்டிலிருந்து இரகசியமாக வெளியேறி, பேஸ்புக் காதலனின் உறவினர் வீடொன்றில் தங்கியிருந்தார்.

இருவரும் திருமணம் செய்வது உறுதியான பின்னர், யுவதியின் பெற்றோர் எதிர்ப்பை கைவிட்டு, திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த வாரம் தென்மராட்சியிலுள்ள கோயிலொன்றில் திருமணம் நடைபெற்றது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கொட்டாஞ்சேனை கொலை: ஒருவர் தடுத்து வைப்பு!

Pagetamil

அனுர வடக்கிற்கு தரை வழியால் செல்வதால் நாட்டுக்கு என்ன நன்மை?

Pagetamil

தமிழர்களுக்குள் மோதல் உருவாக்க தமிழர் மீன்பிடி அமைச்சராக நியமிக்கப்படுகிறாரா? – இரா.சாணக்கியன்

east tamil

நெல்லியடி பொலிசார் சித்திரவதை செய்வதாக கூறும் இளைஞன்: பின்னணி என்ன?

Pagetamil

நெல்லியடி பொலிசார் சித்திரவதை செய்ததாக இளைஞன் குற்றச்சாட்டு

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!