Pagetamil
இலங்கை

டிங்கர் லசந்த பொலிசாரின் சூட்டில் பலி

பல கொலைகள் மற்றும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையதாக கூறப்படும் டிங்கர் லசந்த என்றழைக்கப்படும் லுணுவிலகே லசந்த, வடக்கு களுத்துறை, டயகமவில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை தேடிச் சென்ற போது, அவர் பொலிசார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதாகவும், இதையடுத்து பொலிசாரின் பதில் தாக்குதலில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிக்வெல்லவில் சன்சைன் சுதா படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான லசந்த மாத்தறையை வசிப்பிடமாகக் கொண்டவர். அவர் கொலைகள் உட்பட 13 குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் சன்சைன் சுத்தாவை சுட பயன்படுத்திய துப்பாக்கி, பொலிஸாருடன் சென்று தேடும் போது களுத்துறை வடக்கு டயகம பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

முன்னாள் தலைவர்களின் வெளிநாட்டு பயண செலவுகள்

east tamil

‘சிறைக்குள் வீட்டுச்சாப்பாடு கிடைக்கவில்லை’: ஞானசாரரின் சோக்கதை!

Pagetamil

கோட்டாவின் மந்திரவாதி ஞானாக்காவுக்கு ரூ.280 மில்லியன் இழப்பீடு!

Pagetamil

யாழ் போதனா வைத்தியசாலை தாதியர் போராட்டம்

Pagetamil

தொடருந்து சாரதிகள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

east tamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!