Pagetamil
முக்கியச் செய்திகள்

குருந்தூர்மலை விவகாரத்தில் போராடியவர்கள் தமிழர்கள் அல்ல; வன்னி எம்.பிக்கள் யூதர்களே; தமிழ்-சிங்கள பிரச்சனையையும் அவர்களே கிளப்புகிறார்கள்: ஞானசார தேரரையே மிரளவைத்த இந்துத்துவ அமைப்பு!

குருந்தூர் மலைக்கும் நீராவியடிக்கும் எதிராக போராடியவர்கள் தமிழர்கள் அல்ல. அவர்கள் யூதர்கள். மத மாற்ற சட்டம் நடைமுறைக்கு வர வேண்டும் என கேட்டுக்கொள்வதாக இந்தியாவின் ஆர்எஸ்எஸ் பாணியில் இலங்கையில் இயங்கும் ருத்ரசேனை என்ற இந்துத்துவ அமைப்பின் முல்லைத்தீவு மாவட்ட பிரமுகரும் புதுக்குடியிருப்பு பிரதேசத்தின் கிராம சேவையாளருமான ஒருவர் ஒரே நாடு ஒரே சட்டம் செயலணியிடம் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் ஞானசார தேரரின் தலைமையில் இன்று (22) இடம்பெற்ற ஒரே நாடு ஒரே சட்டம் என்ற செயலணியின் கருத்தறியும் கூட்டத்திலேயே குறித்த செயலணியிடம் இவ்வாறு முறையிட்டுள்ளார்.

மேலும் ககருத்து தெரிவித்த அவர் ,

இங்கு நடைபெறும் மதமாற்றங்களை தடை செய்ய வேண்டுமாக இருந்தால் நாட்டில் மதமாற்ற தடை சட்டம் உருவாக்கப்படவேண்டும் . குருந்தூர் மலைக்கு எதிராகவும் நீராவியடிக்கு எதிராகவும் போராடியவர்கள் எவரும் திருக்கேதீஸ்வரம் பிரச்சனைக்கு எதிராக போராடவில்லை. இவர்கள் யாரும் தமிழர்கள் இல்லை. இவர்கள்தான் தமிழ் சிங்கள பிரச்சனையை உண்டாக்குவது. இந்த மதமாற்றிகள் அதனை தங்களது அரசியல் நோக்கத்துக்காக பயன்படுத்துகின்றார்கள்.

முல்லைத்தீவில் தமிழர் மரபுரிமை பேரவை என்ற ஒரு அமைப்பு உள்ளது. இந்த அமைப்பில் உள்ளவர்கள் யாரும் தமிழர்களே இல்லை. தமிழர்கள் அல்லாத அவர்கள் எவ்வாறு தமிழர்களின் மரபுரிமையை பாதுகாக்கும் அமைப்பினர் என கூறலாம். வன்னி மாவட்டத்தில் 06 பாராளுமன்ற உறுப்பினர்கள் இவர்களில் எவரும் தமிழர்கள் இல்லை என அவர் தெரிவித்த போது, ஞானசார தேரரே ஒரு கணம் திக்குமுக்காடி விட்டார்.

என்னையே ஓவர்ரேக் பண்ணுவதற்கு இங்கு ஒருவர் இருக்கிறாரே என்ற ஆச்சரியத்துடன், ‘அப்படி இல்லை. இந்து மதத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தான் யாரும் இல்லை’ என தெரிவித்தனர்.

அதற்க்கு மறுத்து கருத்து தெரிவித்த இந்துத்துவ அமைப்பின் பிரமுகர், ‘இல்லை பாராளுமன்ற உறுப்பினர்களாக உள்ளவர்கள் அனைவரும் யூதர்களே’ என தெரிவித்தார்.

செயலணி கூட்டம் இடம்பெற்றுக்கொண்டிருந்த நிலையில் ஊடகவியலாளர்கள் எவரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இருந்தபோதிலும் கூட்டத்தின் முடிவு நேரத்தில் ஊடக சந்திப்புக்காக ஊடகவியலாளர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதேவேளை, செயலணியின் கூட்டம் இடம்பெற்ற மண்டபத்துக்குள்  அனுமதிக்கப்படுவார்கள் தொடர்பிலான முடிவுகளை சில பௌத்த தேரர்களே எடுப்பதை அவதானிக்க முடிந்ததது.

ஒவ்வொரு ஊடகவியலாளரின் பின்னாலும் ஒருவர் நிறுத்தப்பட்டிருந்ததோடு செயலணி தலைவரிடம் கேள்வி கேட்ட ஊடகவியலாளர்களையும் பௌத்த பிக்கு ஒருவர் தொலைபேசியில் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

மண்டபத்துக்குள் ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட்ட பின்னரே, ருத்திரசேனை பிரமுகரின் ‘குபீர்’ கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. அவரது கருத்துக்களை கேட்டு மிரண்ட ஞானசார தேரர் குழுவில் அங்கம் வகித்த பௌத்த பிக்கு உள்ளிட்டவர்கள் உடனடியாக ஒளிப்பதிவு செய்தவற்றை நீக்குமாறு கோரி கமெராவை வாங்கி அந்த காணொளியை நீக்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு முல்லைத்தீவுக்கு வருகைதந்த பொதுபலசேனா அமைப்பின் தலைவரை வன்னி தமிழ் இளைஞர்கள் சங்கம் வரவேற்கிறோம் என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் பரந்தன் முல்லைத்தீவு வீதி எங்கும் ஒட்டபட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. ருத்திரசேனை அமைப்பினரே இந்த காரியத்தை செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனையை மதப்பிரச்சனையாக மாற்றும் பல குழுக்கள் அரச பின்னணியில் களமிறக்கப்பட்டுள்ள சந்தேகம் ஏற்கனவே பலராலும் சுட்டிக்காட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

மின் கட்டணம் 20 சதவீதத்தால் குறைப்பு!

east tamil

UPDATE: மன்னார் நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச்சூடு; 2 பேர் உயிரிழப்பு!

Pagetamil

மன்னார் நீதிமன்ற வாயிலில் துப்பாக்கிச்சூடு; 3 பேர் காயம்: உயிலங்குளம் இரட்டைக்கொலைக்கு பழிக்குப்பழியா?

Pagetamil

இஸ்ரேல் -ஹமாஸ் போர் நிறுத்த உடன்பாடு எட்டப்பட்டது: ஆறு வார காசா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விவரங்கள்!

Pagetamil

இலங்கையுடன் ஒத்துழைப்பை தொடர சீன ஜனாதிபதி உறுதி!

Pagetamil

Leave a Comment