வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான 6ஆம் நாள் விவாதம் இன்று!

Date:

2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நிதி அமைச்சர் மக்கள் மீது மேலும் சுமையை ஏற்றியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மன்னப்பெரும, பொருளாதார பிரச்சினைகள் காரணமாக பொதுமக்கள் ஏற்கனவே நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும், நிதியமைச்சர் அவர்களுக்கு எவ்வித நிவாரணமும் வழங்கத் தவறியதாகவும் தெரிவித்தார்.

சுகாதார அமைச்சுக்கான ஒதுக்கீடுகளை குறைப்பது தற்போதைய நிர்வாகம் மக்களையோ அவர்களின் நல்வாழ்வையோ மதிப்பதில்லை என்பதற்கான மற்றொரு அறிகுறியாகும் என்றார்.

COVID-19 தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் போதிய ஆதரவைப் பெறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை மூலம் இலங்கை வருடாந்தம் 4 முதல் 5 பில்லியன் அமெரிக்க டொலர் வரை வருமானம் ஈட்டுவதாகவும், பெருமளவிலான மக்கள் இத்தொழிலை நம்பியிருப்பதாகவும் அவர் கூறினார்.

சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கு மற்ற நாடுகள் ஆதரவு அளித்தாலும், நாட்டின் ஆட்சியாளர்கள் பல்வேறு மோசடிகள் மூலம் நிலைமையை மோசமாக்கியுள்ளனர். இதுபோன்ற செயல்களால் நாடு முன்னேற முடியாது என்றார்.

இதேவேளை, 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் ஆறாம் நாள் இன்று காலை 10 மணிக்கு பாராளுமன்றத்தில் ஆரம்பமாகவுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்