24.2 C
Jaffna
January 7, 2025
Pagetamil
உலகம் முக்கியச் செய்திகள்

அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி உலகின் பெரும் பணக்கார நாடாக உருவெடுத்தது சீனா!

அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளி உலகின் பெரும் பணக்கார நாடு என்ற அந்தஸ்தை சீனா கைப்பற்றி உள்ளது.

மெக்கன்சி குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையின்படி உலகின் மொத்த சொத்து மதிப்பு கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. 2000ஆம் ஆண்டில் 156 இலட்சம் கோடி டொலராக இருந்த உலகின் சொத்து மதிப்பு 2020இல் 514ஈலட்சம் கோடி டொலராக உயர்ந்துள்ளது. இதில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சிக்கு சீனா காரணமாக உள்ளது.

சீனா உலக வர்த்தக நிறுவனத்தின் உறுப்பினராக ஆவதற்கு முந்தைய 2000ஆம் ஆண்டில் அதன் சொத்து மதிப்பு 7 இலட்சம் கோடி டொலராக இருந்தது. 2020இல் சீனாவின் சொத்து மதிப்பு 120 இலட்சம் கோடி டொலராக உயர்ந்துள்ளது. இதன்மூலம் அமெரிக்காவைப் பின்னுக்குத் தள்ளி சீனா உலகின் பெரும் பணக்கார நாடாக மாறியுள்ளது.

இதே காலத்தில் அமெரிக்காவின் சொத்து மதிப்பு இரண்டு மடங்கு உயர்ந்து 90 இலட்சம் கோடி டொலராக உள்ளது. மேலும் உலகின் மொத்த வருமானத்தில் 60 சதவீதத்துக்கும் மேல் 10 நாடுகளுக்கு மட்டுமே சொந்தமாக உள்ளது.

உலகின் முன்னணி பணக்கார நாடுகளான சீனா, அமெரிக்கா இரண்டிலும் அவற்றின் மூன்றில் இரண்டு மடங்கு சொத்துகள் வெறும் 10 சதவீத குடும்பத்தினரிடம் மட்டுமே உள்ளது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மொத்த சொத்து மதிப்பில் 68 சதவீதம் ரியல் எஸ்டேட்டில் உள்ளது. மீதமுள்ளவை உட்கட்டமைப்பு, இயந்திரங்கள், சாதனங்கள் மற்றும் மிகக் குறைவாகவே அறிவுசார் சொத்துகள், காப்புரிமைகளில் உள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

தமிழகத்தில் வாக்காளர் அதிகரிப்பு

Pagetamil

பதவி விலகுவதாக அறிவித்தார் கனடா பிரதமர்: அமெரிக்காவின் புதிய மாநிலமாக இணைய ட்ரம்ப் அழைப்பு!

Pagetamil

முல்லைத்தீவில் கரையொதுங்கியவர்கள் உண்மையான அகதிகளா என ஆராய்கிறதாம் அனுர அரசு!

Pagetamil

முக்கிய தீர்மானங்கள் இல்லை… வழக்கம் போல கூடிக்கலைந்தது ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி!

Pagetamil

Leave a Comment