31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

மாகாண அதிகாரங்களை பிடுங்க முயன்ற யாழ்ப்பாண சைவப்பிரமுகர்களிற்கு பதிலடி கொடுக்கும் மாநகரசபை!

எதிர்வரும் 18 ஆம் திகதி கார்த்திகை தீபத் திருநாளில் நாவலர் கலாசார மண்டபத்தின் நுழைவாயிலில் நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறந்து வைக்கப்படவுள்ளது.

யாழ் மாநகர சபையின் உறுதுணையுடன் சைவ மகா சபையால் நிறுவப்பட்ட திருவுருவச் சிலை காலை 10 மணிக்கு திறந்து வைக்கப்படவுள்ளது.

நாவலர் பெருமானின் திருவுருவச் சிலை திறப்பு விழாவினை முன்னிட்டு நாவலர் கலாசார மண்டபத்தை புனரமைக்கும் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றது.

நாவலர் கலாசார மண்டபத்தின் பராமரிப்பை மாநகரசபையால் மேற்கொள்ள முடியாது, அதை மத்திய அரசிடமே கையளிக்க வேண்டுமென அரச தரப்பினர் கேட்டிருந்தனர். யாழ்ப்பாண சைவப் பிரமுகர்கள் என கூறிக்கொண்ட ஒரு குழுவும், மாகாண அதிகாரத்தை பிடுங்கி மத்தியிடம் வழங்க தீவிரமாக முயற்சித்தது. அவர்களிற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, நாவலர் மண்டபத்தை புதுப்பொலிவுடன் பராமரிக்க யாழ் மாநகரசபை நடவடிக்கையெடுத்துள்ளது.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

Leave a Comment