அநுராதபுரத்தில் பிக்கு ஒருவரை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில், நேற்று (14) அனுராதபுரம் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர், பொலிஸ் பொறுப்பதிகாரி ஒருவரின் மகன் உட்பட மூவரை அநுராதபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள எப்பாவல பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய 3 மாணவர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
யாழ்ப்பாணம் கொடிகாமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மகன், இராணுவ அதிகாரி ஒருவரின் மகன் உள்ளிட்ட 3 மாணவர்களே கைது செய்யப்பட்டனர்.
கடந்த 12ஆம் திகதி மாலை விகாரை வளாகத்திலிருந்த கட்டிடமொன்றின் பின்புறமிருந்து 3 மாணவர்களும் மது அருந்திக் கொண்டிருந்ததுடன், அது தொடர்பில் வினவிய போது பிக்கு தாக்கப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.
தாக்குதலுக்கு உள்ளான பிக்கு, அனுராதபுரத்திலுள்ள தேசிய பாடசாலையொன்றின் ஆங்கில ஆசிரியராவார்.
மூன்று மாணவர்கள் தாக்கியதில் பிக்குவின் மூக்கு உடைந்து இரத்தம் சொட்டியதாக பொலிஸில் செய்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.