வாக்கிங் சென்ற இளம் நடிகையை தாக்கி செல்போன் பறிப்பு

Date:

பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் கே.பி.ஆர். பார்க்கில் வாக்கிங் சென்ற நடிகை ஷாலு சௌராசியாவை தாக்கி செல்போனை பறிக்கப்பட்டிருக்கிறது.

தெலுங்கு நடிகை ஷாலு சௌராசியா ஹைதராபாத் பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் கே.பி.ஆர். பார்க்கில் ஞாயிற்றுக்கிழமை இரவு 8.30 மணி அளவில் வாக்கிங் சென்றிருக்கிறார்.

அப்பொழுது அங்கு வந்த வாலிபர் ஒருவர் ஷாலுவை மிரட்டி பணம், நகையை கேட்டிருக்கிறார். ஷாலு எதிர்க்கவே அவரை முகத்தில் குத்திவிட்டார். மேலும் கல்லால் அவரை தாக்க முயன்றார். பின்னர் ஷாலுவின் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார் அந்த வாலிபர்.

வாலிபர் தாக்கியதில் ஷாலுவின் தலை, கண் அருகே காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.

பார்க்கில் நடந்தது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார் ஷாலு. அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.

சம்பவம் நடந்த பகுதியில் இருக்கும் சிசிடிவி கேமராக்களில் பதிவானதை சோதனை செய்து வருகிறார்கள். வாக்கிங் சென்ற இளம் நடிகை தாக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

40 ஆண்டுகளின் பின் ஈரானுக்குள் அமைதியாக நடக்கும் அதிகார மாற்றம்: மதகுருமாரை பின்தள்ளி ஆதிக்கம் செலுத்தும் இராணுவம்!

த நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகையின் ஒரு விரிவான அறிக்கையின்படி, ஈரானின் முடிவெடுக்கும்...

அம்பியூலன்ஸ் மெதுவாக சென்றதால் பொலிஸ்காரர் உயிரிழப்பா?: பௌத்த பிக்கு குற்றச்சாட்டு

திருகோணமலை மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு ஏற்றிச்...

ஈரானுக்கு எதிராக அணு ஆயுதங்களை பயன்படுத்தமாட்டோம்: ட்ரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டேன் என்று அமெரிக்க...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்