உலகத்தை ஏமாற்ற புள்ளி விபரத்தை, இலக்கத்தை மாற்ற அரசாங்கம் முயற்சித்தாலும், அது தோல்வியடைந்த வரவு செலவு திட்டம் என்பது வௌிவரும். ஐசிங் பூசிய கேக் இதுவென்பது வெளியாகும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிக தெரிவித்துள்ளார்.
இன்று (15) நாடாளுமன்றத்தில் வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
7 மூளைகளை உடையவர்தான் நிதியமைச்சராக இருப்பதாக சொன்னார்கள். இரட்டை பிஜாவுரிமையுடைய அவர்ஈ அரசியலமைப்பில் மாற்றம் செய்துதான் நாடாளுமன்றத்திற்கு வந்தார். பசில் தரப்பினர் சொன்னார்கள், வரவு செலவு திட்டம் எல்லோரையும் ஆச்சரியமைய வைக்கும் என.
உண்மைதான். வரவு செலவு திட்டத்தை பார்த்து ஆச்சரியடைந்துள்ளனர். இப்படி ஒன்றுமில்லாத வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதே என.
இந்த வரவு செலவு திட்டம் இலங்கை மக்களின் மனநிலையிலிருந்து சமர்ப்பிக்கப்படவில்லையென மக்கள் பேசிக்கொள்கிறார்கள்.
சிறு வயதில் பாடசாலை மாணவர்கள், ரிப்போர்ட்டில் மாற்றம் செய்வார்கள். 7 புள்ளியை பெற்றால் பின்னால் ஒரு பூச்சியத்தை இட்டு, 70 புள்ளி பெற்றதாக பெற்றோரை சமாளித்துக் கொள்வார்கள். அவர்கள் இலக்கத்தை மாற்றியதால் பரீட்சையில் சித்தியடைந்தவர்களாக மாற மாட்டார்கள். ஏமாற்றவே அதை செய்தார்கள். அப்படித்தான் வரவு செலவு திட்டத்தில் அரசாங்கம் இலக்கங்களை இட்டுள்ளது.
அரசாங்கம் மில்லியன் கணக்கில் நிதியொதுக்கீடு செய்வதாக பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதட்டினார்கள். முச்சக்கர வண்டி சாரதிகளிற்கு 70 கோடி ரூபா ஒதுக்கப்பட்டதால் மகிழ்ச்சியடைந்து, சிற்றுண்டிச்சாலைகளிலும் அவர்கள் பிதற்றிக் கொண்டிருந்தார்கள். வீட்டுக்க சென்று பார்த்தால்தான் தெரியும். நாட்டில் 8 இலட்சம் முச்சக்கர வண்டிகள் உள்ளன. ஒருவருக்கு நிவாரணமாக 750 ரூபாதான் கிடைக்கும். அதை வைத்து ஒரு டயராவது வாங்க முடியுமா என்றார்.



