வவுனியா நெடுங்கேணி உட்பட தமிழர் பகுதிகளில் இனப்பரம்பலை மாற்றும் அரசின் திட்டமிட்ட செயலை எதிர்த்து இன்று (15) நெடுங்கேணி பிரதேச செயலகம் முன்பாக போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கோத்தா மகிந்த அரசே திட்டமிட்ட குடியேற்றத்தை நிறுத்து, மாற்றாதே மாற்றாதே இன விகிதாச்சாரத்தை மாற்றாதே, வளர்க்காதே வளர்க்காதே இன் முரண்பாட்டை வளர்க்காதே, சிறுபான்மை தேசிய இனங்கள் சிங்கள பேரினவாதத்தின் தீனியா?, தொல்பொருள் திணைக்களமே தமிழர்களின் வரலாற்றை மறைக்காதே, பறிக்காதே பறிக்காதே மாகாண சபைகளின் அதிகாரத்தை பறிக்காதே, நிலமற்ற தமிழ் மக்களுக்கு/ நிலத்தை வழங்கு, வேண்டாம் வேண்டாம் சிங்கள குடியேற்றம் வேண்டாம் போன்ற கோசங்கள் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களால் எழுப்பப்பட்டன.
குறித்த போராட்டத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவஞானம் சிறீதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராஜா, வவுனியா வடக்கு பிரதேச சபையின் தவிசாளர், உள்ளூராட்சி சபைகளின் உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
