கண்டி – கொழும்பு பிரதான வீதியின் பஹல கடுகண்ணாவ பகுதியை போக்குவரத்துக்காக மீள திறப்பது தொடர்பில் இன்று தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
மண்சரிவு அபாயம் காரணமாக கடந்த நவம்பர் மாதம் 10ஆம் திகதி குறித்த வீதி மூடப்பட்டது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம், வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் கேகாலை மாவட்ட செயலக அதிகாரிகளின் பங்குபற்றுதலுடன் இன்று விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ் வீரசூரிய தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை காரணமாக கடந்த நான்கு நாட்களாக குறித்த வீதி மூடப்பட்டுள்ளது.
கேகாலை பிரதேசத்தில் இன்று சீரான காலநிலை நிலவும் பட்சத்தில் போக்குவரத்துக்கான ஒரு பாதையை மீள திறப்பதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக கேகாலை மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
அதன்படி, இன்று வீதி திறக்கப்பட்டால், அப்பகுதியில் வாகனங்கள் நிறுத்த அனுமதிக்கப்படாது, மேலும் வாகன ஓட்டிகள் சாலையைப் பயன்படுத்தும் போது இரண்டு வாகனங்களுக்கு இடையில் கணிசமான தூரத்தை பராமரிக்க வேண்டியிருக்கும்.