விக்னேஷ் சிவன் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி லுக் மட்டுமே உள்ளது. நயன்தாரா மற்றும் சமந்தா ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் விஜய் சேதுபதியின் கேரக்டர் பெயர் ராம்போ என்றும் அதற்கு விரிவாக்கம் ’ரஞ்சன்குடி அன்பரசு முருகேச பூபதி ஊந்திரன்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Presenting #RAMBO 🧑🦱😎
R'anjankudi A'nbarasu M'urugesa B'oopathy O'hoondhiran @VijaySethuOffl from #KaathuVaakulaRenduKaadhal ❤️❤️@VigneshShivN #Nayanthara @Samanthaprabhu2 @anirudhofficial @sreekar_prasad @srkathiir @KVijayKartik @Rowdy_Pictures @SonyMusicSouth #KRK #KRKFL pic.twitter.com/gfcWViDRsk— Seven Screen Studio (@7screenstudio) November 15, 2021