24.4 C
Jaffna
January 28, 2025
Pagetamil
முக்கியச் செய்திகள்

இன்று வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும்!

2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இது இலங்கையின் 76வது வரவு செலவுத் திட்டம். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் இரண்டாவது வரவு செலவுத் திட்டம் ஆகும்.

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவினால் ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு அல்லது வரவுசெலவுத்திட்ட உரை பிற்பகல் 2 மணிக்கு இடம்பெறவுள்ளது.

2022ஆம் நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் கடந்த ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 2022 நிதியாண்டுக்கான சேவைச் செலவினங்களை ஒருங்கிணைந்த நிதியிலிருந்து அல்லது வேறு ஏதேனும் பொருத்தமான நிதியிலிருந்து கடன்களைப் பெறுவதற்கான ஏற்பாடுகளுடன் பெறுவது தொடர்பாக, ஒதுக்கீட்டுச் சட்டமூலம் செப்டம்பர் 29ஆம் திகதி அரசிதழில் வெளியிடப்பட்டது.

அதன்படி, 2022 ஜனவரி 1 முதல் 2022 டிசம்பர் 31 வரையிலான காலப்பகுதியில் மொத்த அரச செலவினம் ரூ.2,505.3 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சுக்கு ரூ.373.1 பில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுச் சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு ரூ.286.7 பில்லியன், நெடுஞ்சாலைகள் அமைச்சுக்கு ரூ.250.1 பில்லியன் மற்றும் கல்வி அமைச்சுக்கு ரூ.127.5 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நாடு இன்னும் COVID-19 தொற்றுநோய் நெருக்கடியிலிருந்து மீளாத போதிலும், சுகாதார அமைச்சுக்கு ரூ.153.5 பில்லியன் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

அனைத்து செலவுத் தலைப்புகள், வரிவிதிப்பு, நிதி ஒருங்கிணைப்பு அல்லது பிற ஒதுக்கீடுகள் பொது நிதிகள் மீதான அதிகாரங்களைக் கொண்ட பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிநபர் ஒதுக்கீடுகள் மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான முழு வரவுசெலவுத்திட்டத்தின் மீதும் விவாதித்து வாக்களிப்பார்கள்.

அனைத்து செலவுத் தலைப்புகள், வரிவிதிப்பு, நிதியை ஒருங்கிணைப்பது அல்லது பிற ஒதுக்கீடுகள் பொது நிதிகள் மீதான அதிகாரங்களைக் கொண்ட பாராளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.

அதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்கள் தனிப்பட்ட ஒதுக்கீடுகள் மற்றும் 2022 ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட் மீதும் விவாதித்து வாக்களிப்பார்கள்.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை 13ஆம் திகதி சனிக்கிழமை, 15 ஆம் திகதி திங்கட்கிழமை,16ஆம் திகதி செவ்வாய்க்கிழமை, 17 ஆம் திகதி புதன்கிழமை, 19ஆம் ஆம் திகதி வெள்ளிக்கிழமை, 20 ஆம் திகதி சனிக்கிழமை, 22 ஆம் திகதி திங்கட்கிழமைகளில் இடம்பெற்று திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நடத்தப்படும்.

குழுநிலை விவாதம் நவம்பர் 23 ஆம் திகதி தொடங்கி டிசம்பர் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை சனிக்கிழமை உட்பட 16 நாட்களுக்கு தொடரும். பட்ஜெட் விவாதம் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்கள் தவிர தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பு அல்லது இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 10 ஆம் திகதி மாலை 5 மணிக்கு நடைபெறும்.

இதற்கிடையில், செவித்திறன் குறைபாடுள்ளோர் சார்பில் இந்த ஆண்டுக்கான பட்ஜெட் விவாதத்தை சைகை மொழியில் சமர்பிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, பட்ஜெட் விவாதத்தின் போது நேரடி ஒளிபரப்புடன் சைகை மொழி சாளரமும் ஒரே நேரத்தில் ஒளிபரப்பப்படும்.

இன்று முதல் வரவுசெலவுத்திட்ட விவாதத்தின் முழு காலப்பகுதியிலும் அனைத்து சுகாதார வழிகாட்டுதல்கள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு அமைவாக சபை அமர்வுகளை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் தம்மிக்க தசநாயக்க தெரிவித்தார்.

பட்ஜெட் விவாதத்தின் போது பொது காட்சியகம் பொதுமக்களுக்கு திறக்கப்படாது மற்றும் பட்ஜெட் குழு அமர்வில் குறைந்த எண்ணிக்கையிலான அரசு அதிகாரிகள் மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். சிறப்பு விருந்தினர் மற்றும் அழைக்கப்பட்ட வெளிநாட்டு இராஜதந்திர தூதர்கள் மற்றும் உயர்ஸ்தானிகர்களுக்கான காட்சியகம் நாளை திறக்கப்படவுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தமிழ் அரசு கட்சிக்காக தமிழ் கட்சிகளின் சந்திப்பு மீளவும் ஒத்திவைப்பு!

Pagetamil

யோஷித ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல்

Pagetamil

தமிழ் கட்சிகளிற்கிடையிலான சந்திப்பு 27ஆம் திகதிக்கு தள்ளிவைப்பு!

Pagetamil

தரம் 5 புலமைப்பரிசில் முடிவுகளும், வெட்டுப்புள்ளியும் வெளியீடு!

Pagetamil

அட்டகாசத்தில் ஈடுபட்ட அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

Pagetamil

Leave a Comment