மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், ஒமந்தை கிராம அலுவலர் ஆகியோருக்கு கோவிட் தொற்று உறுதி!

Date:

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் ஒமந்தை கிராம அலுவலர் ஒருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் அவரது குடும்பத்தினரது உடல் நிலையில் ஏற்பட்ட மாற்றத்தையடுத்து இன்று (11) வவுனியாவில் துரித அன்டிஜன் பரிசோதனை முன்னெடுத்திருந்தனர். இதன்போது மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபருக்கும், அவரது குடும்பத்தினர் இருவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், வவுனியா, ஓமந்தைப் பகுதி கிராம அலுவலர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட துரித அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், அவர்களுடன் தொடர்புடையவர்களையும் தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

விசாரணை நாட்களில் நீதிமன்றம் வந்து விட்டு, ஏனைய நாட்களில் ஊர் சுற்றலாம்: நாமலை கலாய்த்த அமைச்சர்!

எதிர்க்கட்சி அரசியல்வாதியான நாமல் ராஜபக்ச, திட்டமிடப்பட்ட திகதிகளில் நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்ளும்...

இலங்கையில் 25% தனியார் பேருந்துகள் மண்ணெண்ணெயிலேயே இயங்குகின்றன!

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஜெமுனு விஜேரத்ன, நாட்டின்...

அமெரிக்கா- ஈரான் ஒப்பந்தத்தின் 14 அம்ச உள்ளடக்கம் இதுதான்!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் வெள்ளிக்கிழமை கையெழுத்திடப்படும் என எதிர்பார்க்கப்படும் 14 அம்ச...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்