16 வயது சிறுவன் அதிவேகமாக வாகனத்தை செலுத்தி சென்று ஏற்படுத்திய விபத்தில் காயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 17 வயது மாணவன் இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தளை மஹபாகே பகுதியில் கடந்த 4ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காயமடைந்துள்ளனர்.
16 வயதுடைய மாணவன் ஓட்டிச் சென்ற சொகுசு வாகனம், வீதியை விட்டு விலகி எதிர் திசையில் வந்த கார் உட்பட ஐந்து வாகனங்கள் மீது மோதியுள்ளது.
வாகனத்தை செலுத்தி விபத்து ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் சிறுவனும், நகை வர்த்தகரான தந்தையும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.




