கரைச்சி பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 9 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கரைச்சி பிரதேச சபையின் சபை அமர்வு கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தலைமையில் இன்று 10 மணியளவில் இன்று ஆரம்பமானது. சபை ஆரம்பித்ததும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்திருந்தார்.
விவாதங்களின் பின்னர் வாக்களிப்பு க்கு விடப்பட்டது. 35 உறுப்பினர்கள் உள்ள சபையில் 34 பேர் வாக்கெடுப்பில் கலந்து கொண்டனர் ஆதரவாக 21 வாக்குகளும் எதிராக 12 வாக்குகளும் அளிக்கப்பட்டன . ஒருவர் நடுநிலை வகித்திருந்தார் 9 மேலதிக வாக்குகளால் கரைச்சி பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு நிறைவேற்றப்பட்டது
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1