ஏமாற்றினாரா கணவர்?; கவர்ச்சியால் விவாகரத்தா?: புகைப்படத்தால் முற்றுப்புள்ளி வைத்த பிரியாமணி!

Date:

பிரியாமணி  ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து ‘பருத்திவீரன்’ படத்தில் ‘முத்தழகு’ கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பருத்திவீரன் படத்தில் நடித்ததற்காக பிரியாமணிக்கு தேசிய விருது கிடைத்தது.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.

பிரபலமாக இருந்த போதே 2017 ஆம் ஆண்டு முஸ்தபா ராஜ் என்பவரைத் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் பிரியாமணி சினிமாவில் நடித்து வந்தார். அதன்பிறகு, சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும், வெப் சீரிஸல் கவனம் செலுத்தி வந்தார்.

சமீபத்தில் நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ஃபேமிலி மேன் வெப் சீரிஸில் பிரியாமணி நடித்திருந்தார். தேசிய விருது பெற்ற அசுரன் படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அசுரன் படத்தில் மஞ்சு வாரியர் நடித்த கதாபாத்திரத்தில் பிரியாமணி தெலுங்கில் நடித்திருந்தார். இப்படத்தில் பிரபல நடிகர் வெங்கடேஷ் ஜோடியாக பிரியாமணி நடித்திருந்தார்.

இப்படம் வெளியாகும்போது கொரோனா காலகட்டம் என்பதால் திரையரங்குகளில் வெளியிடாமல் ஓடிடி தளத்தில் வெளியானது. இந்நிலையில் பிரியாமணியின் கணவர் முஸ்தபா ஏற்கனவே திருமணமானவர் என்றும் அதை மறைத்து பிரியாமணியை திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி வெளியானது.

இதேவேளை, பிரியாமணி அண்மை நாட்களாக கவர்ச்சியான புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார்.

இதனால் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விரைவில் முஸ்தபாவை பிரியாமணி விவாகரத்து செய்யப் போகிறார் என்று செய்தி பரவியது.

இந்த  செய்திகளிற்கு பதில் சொல்லாமல் மௌனம் சாதித்து வந்த பிரியாமணி தீபாவளியன்று கணவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனால் ஒட்டுமொத்த வதந்திகளுக்கு பிரியாமணி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

எண்ணெய் உற்பத்தியை குறைத்த ஈரான்

அமெரிக்காவின் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றுகையால் ஏற்பட்ட அதிகரித்து வரும் சேமிப்பு நெருக்கடியைச்...

கிளிநொச்சியில் பிளாஸ்டிக் துப்பாக்கியுடன் மே தினத்திற்கு வந்தவர் கைது!

மே 1 அன்று கிளிநொச்சி டிப்போ சந்திக்கு அருகே நடைபெற்ற மே...

மனவைி விவகாரத்து கோரியதனால்  கோபத்தில்  தென்னைகளை வெட்டி வீழ்த்திய கணவன்

கிளிநொச்சி செல்வாநகர் பகுதியில் மூன்று பெண் பிள்ளைகளின் தாயான பெண்ஒருவர் தனது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்