சிறிதர் தியேட்டரின் சர்ச்சைக்குரிய அரைச்சுவர் இடிந்து விழுந்தது!

Date:

யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள ஈ.பி.டி.பி அலுவலகமான சிறிதர் தியேட்டரின் முன்பாக அமைக்கப்பட்டிருந்த அரைச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.

ஸ்ரான்லி விதி அகலிப்பு பணி ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இந்த அரைச்சுவர் சர்ச்சையானது.

வீதி அகலிப்பு பணியின் போது, ஈ.பி.டீ.பி அலுவலகத்துக்கு முன்பாக வீதியோடு அமைந்துள்ள அரைச்சுவர் முற்றாக அகற்றப்பட்டது. அந்த அரைச்சுவர் வீதிக்குள் துருத்திக் கொண்டிருந்தது. அப்படி துருத்திக் கொண்டிருந்த வர்த்தக நிலையங்கள், குடியிருப்புக்களின் கட்டமானங்களும் அகற்றப்பட்டன.

எனினும், பின்னர் ஈ.பி.டி.பி அலுவலகத்தின் முன்பிருந்து அகற்றப்பட்ட அரைச்சுவர் மட்டும் கட்டப்பட்டது.

ஈ.பி.டி.பியினரின் அனுமதியின்றி ஒப்பந்தக்காரர் அதனை அகற்றியதால், மீள அமைத்துக் கொடுக்கப்பட்டதாக வீதி அபிவிருத்தி அதிகாரசபை விளக்கமளித்திருந்தது.

ஓய்வுபெற்ற இராணுவ மேஜர் ஜெனரலின் நிறுவனமொன்றே, வீதி அபிவிருத்தி அதிகாரசபையிடமிருந்து ஒப்பந்தத்தை பெற்றது. அவர்களிடமிருந்து உப ஒப்பந்தத்தை அங்கஜன் இராமநாதன் ஆதரவாளரான ஒப்பந்தக்காரர் ஒருவர் பெற்றதாக ஒரு தகவல் பரவியது. எனினும், அது உறுதி செய்யப்படவில்லை.

ஒப்பந்தக்காரரால் மீள நிர்மாணிக்கப்பட்ட அரைச்சுவர் இன்று இடிந்து விழுந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் பெய்த மழையை தொடர்ந்து சுவர் இடிந்து விழுந்தது.

 

spot_imgspot_img

More like this
Related

திருகோணமலை சிறைச்சாலை உதவி அத்தியட்சகர் கைது!

திருகோணமலை விளக்கமறியல் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகர் ஒருவர் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில்...

பெல்ஜியம் விஞ்ஞானி பிரான்சிஸ் ஹால்சனுக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

பிரபஞ்சத்தில் நிகழும் தீவிரமான நிகழ்வுகளிலிருந்து உருவாகும் உயர் ஆற்றல் கொண்ட நியூட்ரினோ...

சுரேஷ் சாலே மீண்டும் சிஐடியின் காவலில்!

கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அரச புலனாய்வு சேவையின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்