டாம் வீதியில் சூட்கேஸில் யுவதியொருவரின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம், சில மாதங்களின் முன் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அந்த சடலத்திலிருந்து வெட்டப்பட்டிருந்த தலை பற்றிய மர்மம் நீண்டகாலமாக துலங்காமலருந்த நிலையில், நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்ட மண்டையோடு, அந்த யுவதியின் தலையாக இருக்கலாமென கருதப்படுகிறது.
பசறை, படல்கும்புர பிரதேசத்தில் வசிக்கும் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே இந்த கொலையை செய்திருந்திருந்தார். பின்னர், தனது வீட்டின் பின்புறமுள்ள இறப்பர் தோட்டத்தில் தூக்கில் தொங்கி உயிரை மாய்த்திருந்தார்.
8 மாதங்களின் முன்னர் இந்த சம்பவம் நடந்தது.
திருமண உறவிற்கு அப்பால், அந்த யுவதியுடன் காதல் வசப்பட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர், விடுதியொன்றிற்கு யுவதியை அழைத்துச் சென்றுகொலை செய்திருந்தார்.
யுவதியின் தலை மற்றிய மர்மம் நிலவி வருகிறது.
அந்த நாட்களில் பொலிஸ் உத்தியோகத்தரின் வீட்டில் இருந்த ஆழ்துளைக் கிணற்றிலும் தேடப்பட்டது.
யுவதியின் உடலை சூட்கேஸில் அடைத்து, டாம் வீதியில் விட்டுச் சென்ற போது, சிறிய பையொன்றில் யுவதியின் தலைமையை, ஒரு கையில் வைத்திருந்தார். அந்த காட்சிகள் வெளியாகியிருந்தன.
அவரும், பெண்ணும் தங்கியிருந்த ஹங்வெல்ல விடுதிக்கு அருகாமையில் களனி ஆற்றில் தேடிய போதும் தலையை காணவில்லை. பின்னர் களனி ஆற்றின் முகத்துவாரம் முதல் ஹங்வெல்ல வரை விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
யுவதியின் தலையை கண்டுபிடிக்க முடியாத நிலையில் உடலை பிரேத பரிசோதனை செய்து, டிஎன்ஏ சோதனை செய்யப்பட்டது.
கடந்த சனிக்கிழமை (6) படல்கும்புர பகுதியில் கண்டெடுக்கப்பட்ட மண்டை ஓடு அப்பகுதியில் உள்ள வெறிச்சோடிய பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.
படல்கும்புர – பசறை பிரதான வீதியில் அலுபொத பிரதேசத்தில் 11வது மைல் கல்லுக்கு அருகில் வெறிச்சோடிய பிரதேசத்தில் காணப்பட்டது.
கொக்கோ பறிக்கச் சென்ற 10 வயது சிறுவன் ஒருவர், இந்த இடத்தில் முதலில் மண்டை ஓட்டை கண்டார். இதையடுத்து சிறுவன் தனது சகோதரியிடம் இதுபற்றி கூறியுள்ளார்.
மனித மண்டை ஓடு இருப்பதாக 119 பொலிஸ் அவசரகாலப் பிரிவுக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு மண்டை ஓட்டை கண்டுபிடித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளுக்காக அரசாங்க பகுப்பாய்வாளரிடம் ஒப்படைக்கவுள்ளனர்.
மொனராகலை பதில் நீதவான் சிசிர பண்டார நேற்று முன்தினம் (07) மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்ட காணியை நேரில் ஆய்வு செய்தார்.