விண்வெளியில் கால் பதித்த முதலாவது சீனப் பெண்!

Date:

விண்வெளியில் கால் பதித்து நடந்த முதலாவது சீனப் பெண் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் வாங் யாப்பிங்.

அந்தப் பெண்ணும் இன்னொருவரும், சுமார் 6 மணி நேரம் Tiangong விண்வெளி நிலையத்துக்கு வெளியே இருந்தனர்.

விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கும் பணிகளின் ஓர் அங்கமாக அவர்கள் அங்கிருந்ததாகத் தெரிகிறது.

Tiangong விண்வெளி நிலையம் அடுத்த ஆண்டு செயல்படத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலையத்தின் ஒரு பகுதியிலிருந்து வாங்கும், சக ஊழியரும் வெளியேறி கமராவுக்குக் கை அசைத்தது காணொளியாகப் பதிவாகியுள்ளது.

அப்போது, அவர்கள் நிலையத்தின் வெளியே சில இணைப்புகளைப் பொருத்திக்கொண்டிருந்தனர்.

விண்வெளி நிலையத்துக்கு வெளியே, இடம்பெற்றுள்ள முதல் நடவடிக்கை அது என்று சீன விண்வெளி ஆய்வு நிறுவனம் கூறியது.

சீனா உருவாக்கிய புதிய தலைமுறை Feitian ஸ்பேஸ்சூட்களை அணிந்துகொண்டு, இந்த ஜோடி இயந்திரக் கையின் உதவியுடன்  கூடுதல் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சீனா தனது விண்வெளி நிலையத்தை நிர்மாணிப்பதற்காக மூன்று விண்வெளி வீரர்களுடன் ஷென்சோ-13 விண்கலத்தை ஒக்டோபர் 16 அன்று ஏவியது. அவர்கள் 6 மாதங்கள் விண்வெளியில் தங்கியிருப்பர்.

spot_imgspot_img

More like this
Related

திருடச் சென்ற வீட்டில் குறட்டை விட்டு தூங்கிய திருடன்

ரத்தனபிட்டிய பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த திருடன் ஒருவன், உள்ளே...

ஹோர்முஸைத் திறக்கும் திட்டம் குறித்து அமெரிக்காவின் பதில் செவ்வாய்க்கிழமை வரும் – ஈரான் வெளியுறவு அமைச்சர்

ஹோர்முஸ் நீரிணையைத் திறப்பது குறித்த தெஹ்ரானின் முன்மொழிவுக்கு, அமெரிக்காவிடமிருந்து செவ்வாய்க்கிழமையன்று அதிகாரப்பூர்வமான...

அரச வாகனத்தை பயன்படுத்திய வழக்கில் முன்னாள் அமைச்சர் பௌசிக்கு ரூ.66 இலட்சம் அபராதம்!

அனர்த்த முகாமைத்துவ அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், நெதர்லாந்து அரசாங்கத்தால் அனர்த்த முகாமைத்துவ...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்