ரஜினியின் அடுத்த படத்தையும் சிவா இயக்குகிறார்?

Date:

ரஜினியின் அடுத்த படத்தை சிவா இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

சிவா இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘அண்ணாத்த’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ்ராஜ், ஜெகபதி பாபு உள்ளிட்டோர் ரஜினியுடன் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் தீபாவளி பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ரஜினியின் அடுத்த படத்தையும் சிவாவே இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது தனது அடுத்த படத்தை சூர்யாவை வைத்து இயக்க சிவா பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக தெரிகிறது. அப்படம் உறுதியானால் உடனடியாக படப்பிடிப்பை தொடங்கி குறுகிய காலத்தில் படத்தை முடிக்கவும் சிவா திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதன் பிறகே ரஜினி படத்துக்கான பணிகளை சிவா தொடங்குவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஜினியை வைத்து அவரது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஒரு படம் தயாரிக்க விரும்புவதாகவும், அப்படத்தை இயக்க சிவாவின் பெயரையே ரஜினியிடம் அவர் பரிந்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சிறப்பாக நடைபெற்ற “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத் தமிழ்ச் சிறுகதைக் களஞ்சியம்” நூல் வெளியீடு

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலைக்கூட அரங்கில் “கால் நூற்றாண்டு கால இஸ்லாமியத்...

சவுதியில் கைதாகியுள்ள அனோஜனின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முக்கிய பிரதிநிதிகள்

சவுதி அரேபியாவில் தண்டனைக்கு உள்ளாகியுள்ள சிவராசா அனோஜன் என்பவரின் குடும்பத்தினரை முக்கிய...

20 ஆண்டுகளின் பின் ஈராக்கிலிருந்து வெளியேறுகிறது அமெரிக்கப்படை!

ஈராக்கில் உள்ள தங்கள் கடைசித் தளங்களிலிருந்தும் அமெரிக்கப் படைகள் புதன்கிழமைக்குள் வெளியேறத்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்