30.7 C
Jaffna
March 29, 2024
உலகம் முக்கியச் செய்திகள்

பருவநிலை மாற்ற அபாயத்தை சுட்டிக்காட்ட கடலில் நின்று உரையாற்றிய துவாலு நாட்டு அமைச்சர்!

கிளாஸ்கோவில் நடக்கும் COP26 பருவநிலை மாநாட்டிற்காக, முழங்கால் அளவு கடல் நீரில் நின்று துவாலு நாட்டு வெளிவிவகார அமைச்சர் உரையாற்றினார்.

பசிஃபிக் பெருங்கடல் நாடான துவாலு (Tuvalu)வின், வெளியுவிவகார அமைச்சர் சைமன் கோஃப் காணொளி வழியாக ஆற்றவுள்ள உரையிலேயே, இந்த புதிய உபாயத்தை கையாண்டார்.

கடலில் அமைக்கப்பட்டுள்ள உரையாற்றுமிடத்தில், கால்சட்டை கால்கள் சுருட்டப்பட்ட நிலையில், சைமன் கோஃப் சூட் மற்றும் டை அணிந்து நிற்கும் படங்கள், சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு, கடல் மட்டத்திற்கு எதிரான துவாலுவின் போராட்டத்தின் கவனத்தை ஈர்க்கின்றன.

பருவ நிலை மாற்றத்தால் தமது தீவு நாடு எத்தகைய அபாயத்தை எதிர்நோக்குகிறது என்பதைக் கோஃப் சுட்டிக்காட்டியுள்ளார்.

பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளில், தாழ்வான பசிபிக் தீவு நாடான துவாலு முன் வரிசையில் உள்ளது என்பதைக் காட்ட கடல் நீரில் முழங்கால் ஆழத்தில் நின்று உரை நிகழ்த்தினார்.

கடல் மட்ட உயர்வால் துவாலு பெரிய அளவில் பாதிக்கக்கூடும் என்று அவர் அச்சம் தெரிவித்தார்.

நாளை செவ்வாய்க்கிழமை காலநிலை மாநாட்டில் இந்த உரை ஒளிபரப்பப்படும்.

தலைநகர் ஃபுனாஃபுட்டியின் முக்கிய தீவான ஃபோங்காஃபேலின் இந்த உரை ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

பெரியளவில் மாசு வெளியிடும் நாடுகள் 2050க்குள் நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை நோக்கமாகக் கொண்டு வரவிருக்கும் தசாப்தங்களில் தங்கள் கார்பன் வெட்டுக்களை தீவிரப்படுத்த உறுதியளித்துள்ளனர்.

ஆனால் பசிபிக் தீவுத் தலைவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளனர், தங்கள் தாழ்வான நாடுகளின் உயிர்வாழ்வதே ஆபத்தில் உள்ளது என்று சுட்டிக்காட்டினர்.

கோஃப்வின் காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

Leave a Comment