மட்டக்களப்பில் விவசாயிகள் வாகன பேரணி!

Date:

மட்டக்களப்பு, வாழைச்சேனையில் விவசாயிகள் கவனவீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்று (8) காலையில் வாழைச்சேனையிலிருந்து வாகன பேரணியாக புறப்பட்ட விவசாயிகள், மட்டக்களப்பு நகர் நோக்கி பயணிக்கிறார்கள்.

தடுக்காதே தடுக்காதே விவசாய வருவாயை தடுக்காதே, சிதைக்காதே சிதைக்காதே விவசாயிகளின் நம்பிக்கையை சிதைக்காதே என்ற வாசகங்களுடன் இன்று காலை விவசாயிகளின் கவனயீர்ப்பு போராட்டம் வாழைச்சேனையில் இருந்து ஆரம்பிக்கப்பட்டது.

விவசாய நடவடிக்கைக்கு 50 வீதம் இரசாயன உரம் தேவையென்றும், ஜனாதிபதி இதில் கவனம் செலுத்த வேண்டுமென்றும் வலிறுத்தி,  உழவு இயந்திரங்கள், மோட்டார் சைக்கிள்களில் பேரணியானது மட்டக்களப்பு பிரதான வீதி வழியாக கிரான், செங்கலடி வீதி ஊடாக மட்டக்களப்பை சென்றடையவுள்ளது.

இதேபோன்று செங்கலடி உறுகாமம் பிரதேச விவசாயிகள் கொக்கட்டிச்சோலை, வவுணதீவு விவசாயிகளும் கல்லடி பால வீதி வழியாக மட்டக்களப்பு நகரை சென்றடைந்து எல்லோரும் ஒன்று சேர்ந்து இரசாயனப் பசளையை வழங்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...

திலீபன் நினைவேந்தலை தடுப்பது மாண்புக்கு எதிரானது – யாழ். சர்வமத பேரவை

ஆன்மிக அடிப்படையில் நினைவேந்தலை தடுப்பது, குழப்புவது, எடுப்பார் கைப்பிள்ளையாக்க முனைவது உயிரிகளின்...

ஏறாவூரில் போதைப்பொருள் ஒழிப்பு குழு மீது பரபரப்பு குற்றச்சாட்டு “அப்பாவி இளைஞர்களை போதைப்பொருளுடன் கைது செய்ய முயற்சி”

ஏறாவூர் பிரதேசத்தில் இராணுவ மேஜர் அனஸ் என்பவர் தலைமையில் போதைப்பொருள் ஒழிக்கும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்