தைவானியச் சுதந்திரத்தை ஆதரிப்போரை, வாழ்நாள் முழுவதும் பாதிக்கக்கூடிய வகையில் தண்டிக்கப் போவதாக, சீனா தெரிவித்துள்ளது.
சீனாவின் தைவானிய விவகார அலுவலகப் பேச்சாளர் அதனைத் தெரிவித்தார்.
தைவானியச் சுதந்திரத்துக்கு ஆதரவானவர்கள் என்று கருதப்படுவோருக்கு எதிராகத் தெளிவான தண்டனையை, சீனா அறிவிப்பது இதுவே முதன்முறை.
தைவானியப் பிரதமர் சூ செங்-சாங், நாடாளுமன்ற சபாநாயகர் யூ சி குன், வெளியுறவு அமைச்சர் ஜோசஃப் வூ ஆகியோரைத் தைவானியச் சுதந்திரத்தின் தீவிர ஆதரவாளர்கள் என்று சீனா பெயர் குறிப்பிட்டது.
இந்தப் பிரிவின் கீழ் யார் யாரெல்லாம் வகைப்படுத்தப்பட்டுள்ளனர் என்ற பட்டியலையும் சீனா, வெளிப்படையாக அறிவித்துள்ளது.
அந்தப் பட்டியலில் உள்ளவர்கள், சீனா, சிறப்பு நிர்வாக வட்டாரங்களான ஹொங்கொங், மக்காவ் ஆகியவற்றுக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனச் சீனப் பேச்சாளர் கூறினார்.
மேலும் அந்த நபர்கள், சீனாவை சேர்ந்தவர்களோடும் நிறுவனங்களோடும் ஒத்துழைக்கவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.